fbpx
Others

தமிழக அரசுக்கு வரவு & செலவு எவ்வளவு – முழு விவரம்….!

  •  தமிழ்நாடு அரசின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.தமிழக அரசின் பட்ஜெட்டை அமைச்சர் பிடிஆர் இன்று தாக்கல் செய்தார். 2021 இடைக்கால பட்ஜெட், 2022 பட்ஜெட்டை போலவே மூன்றாவது முறையாக இன்றும் அவர் காகிதமில்லாத பட்ஜெட்டையே தாக்கல் செய்தார்.இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. குறிப்பாகப் பெண்கள் பெரிதும் எதிர்பார்த்த குடும்பத் தலைவிகளுக்கு உரிமை தொகை என்ற அட்டகாசமான அறிவிப்பும் இதில் இடம்பெற்றிருந்தது.தமிழக அரசின் வருவாய் மற்றும் செலவினங்கள் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம். தமிழக அரசுக்கு மெத்த வரவினங்கள் 2,73,246 கோடி ரூபாயாக இருக்கிறது. அதேபோல தமிழ்நாடு அரசின் மொத்த செலவினங்களாக 3,35,321 கோடி ரூபாயாக உள்ளது. தமிழக அரசின் வரவினங்கள் 2022-23ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10.1 சதவிகிதம் அதிகமாகும். அரசின் சொந்த வரிகள் வாயிலாகப் பெறப்படும் வருவாய் 19.3% சதவிதிகம் உயரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.இப்போது மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 1,81,182 கோடியாக உள்ளது. இதில் அதிகபட்சமாக வணிக வரிகள் மூலம் 73.3% வருவாய் கிடைக்கிறது. அடுத்து முத்திரைத் தாள்கள், பத்திரப் பதிவுகள் மூலம் 14.1% வருவாய் கிடைக்கிறது. இதில் பத்திரப் பதிவுக்கான கட்டணத்தை அரசு 4%இல் இருந்து 2%ஆக குறைத்துள்ளது. அடுத்து மாநில ஆயத்தீர்வை மூலம் 6.5% வருவாய் கிடைக்கும் நிலையில், வாகன வரிகள் மூலம் 4.9% வருவாயும், மற்ற வரிகள் மூலம் 1.2% வருவாயும் கிடைக்கிறது. அடுத்து மாநிலத்தின் சொந்த வரி அல்லாத பிற வருவாய் மூலம் 20,223 கோடி ரூபாய் கிடைக்கிறது. அதேபோல மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் மானியங்கள் மூலம் ரூ. 27,445 கோடியும் மத்திய வரிகளின் பங்காக ரூ. 41,665 கோடியும் அரசுக்கு வருவாயாகக் கிடைக்கிறது. அதேபோல செலவினங்களும் முந்தைய 2022-23 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13.7% அதிகமாகும். செலவினங்களில் அதிகபட்சமாக உதவித் தொகை மற்றும் மானியங்களுக்கு 39.6% ஒதுக்கப்படுகிறது.அடுத்து அரசு ஊழியர்களுக்கான சம்பளங்களுக்கு 25.1% சதவிகிதமும் வட்டி செலுத்த 18% சதவிகிதமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஓய்வூதியம் மற்றும் ஓய்வூகால பலன்களுக்கு 12% மற்றும் செயல்பாடு & பராமரிப்புகளுக்கு 5.3% ஒதுக்கீடுசெய்யப்படுகிறது. மூலதனச் செலவினங்களைப் பொறுத்தவரைச் சாலை மற்றும் பாலங்களுக்கு அதிகபட்சமாக 17,421 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார திட்டங்களுக்கு 8,596 கோடியும் பாசன கட்டமைப்பிற்கு 4,559 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சிக்கு 3,719 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்துத் துறைக்கு 2,900 கோடியும் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைகளுக்கு 2731 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.  ஒட்டுமொத்தமாகத் தமிழக அரசுக்கு வருவாயாகக் கிடைக்கும் ஒரு ரூபாயில் 44 பைசா மாநிலத்தின் சொந்த வரி வருவாய் மூலம் கிடைக்கிறது. பொதுக் கடன் மூலம் 33 பைசா கிடைக்கும் நிலையில், மத்திய வரிகளின் பங்காக 10 பைசாவும், மத்திய அரசிடம் பெறும் உதவி மானியங்களாக 7 பைசாவும் இருக்கிறது. அதேபோல மாநிலத்தின் சொந்த வரி இல்லாத வருவாய் மூலம் 5 பைசாவும் கடன்களின் வசூல் மூலம் ஒரு பைசாவும் அரசுக்கு வருவாயாகக் கிடைக்கிறது. அதேபோல ஒரு ரூபாயை அரசு எப்படி செலவு செய்கிறது என்பதையும் பார்க்கலாம் அதிகபட்சமாக உதவித் தொகை மற்றும் மானியங்களுக்கு 30 பைசா செலவிடப்படுகிறது. அதேபோல சம்பங்களுக்கு 19 பைசாவும், வட்டி செலுத்த 13 பைசாவும் ஒதுக்கப்பட்டுள்ளது. மூலதனச் செலவு மற்றும் கடன்களைத் திருச்சி செலுத்த தலா 11 பைசா செலவிடப்படும் நிலையில், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூகால பலன்களாக 9 பைசாவும் செயல்பாடுகளுக்கும் பராமரிப்புகளுக்கும் 4 பைசாக்களும் செலவிடப்படுகிறது. அதேபோல கடன் வழங்க 3 பைசாவை தமிழக அரசு செலவிடுகிறது.

Related Articles

Back to top button
Close
Close