fbpx
Others

உயர்நீதிமன்றம்–புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம்—நீதிபதி கருத்து

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்வது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறினால் அரசு அதிகாரிகள் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் போக்குவரத்து துறையில் துணை ஆணையர் அந்தஸ்தில் பணியாற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன்ராஜ் என்பவர் 2016-ம் ஆண்டு பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா என்பவரிடம் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்த கடனை திருப்பி செலுத்தும் வகையில் அவர் அளித்த காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திருப்பி அனுப்பப்பட்டது.  இதனை அடுத்து அதிகாரி மோகன்ராஜ்-க்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா அப்போதைய தமிழக தலைமை செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது இந்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்டு இந்த வழக்கனது முடித்து வைக்கப்பட்டுள்ளது.  நீதிபதி கருத்து:;
புகார் கொடுத்த காலத்தில் புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பொதுமக்கள் நலன்கருதி அரசு அதிகாரிகள் தங்கள் கடமைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.இந்த நடவடிக்கை எடுக்க கோரிய சில புள்ளி விவரங்களோடு அளிக்கப்படக்கூடிய புகார்களை பொருத்தவரையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்தஒரு காலதாமதமும் இல்லாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அவ்வாறு நடவடிக்கை எடுக்க தவறினால் அரசு அதிகாரிகள் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விடும் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்

Related Articles

Back to top button
Close
Close