fbpx
Others

 சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை / UP DATE NEWS

 சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை  விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி மலையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் நவம்பர் 9ம் தேதி வரை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு செய்திகள்;  சென்னை: நவம்பர் 5-ம் தேதி சென்னையில் 200 இடங்களில் மழைக்கால மெகா சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. மக்கள் நல்வாழ்த்துறை, சென்னை மாநகராட்சி இணைந்து 200 இடங்களில் மெகா சிறப்பு மருத்துவ முகாமை நடத்துகின்றன. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 நடப்பு செய்திகள் குன்னூர்: குன்னூரில் பெய்து வரும் மழையின் காரணமாக ராஜாஜி நகர் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கற்கள் உருண்டு விழுந்ததில் வீட்டிற்குள் சிக்கிய 3 பெண்களை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
 நடப்பு செய்திகள்   வாட்ஸ்ஆப் குழுவில் எத்தனை பேர் இருக்கலாம்? புதிய அறிவிப்பு வெளியீடு….பிரபல உரையாடல் செயலியான வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது…மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்ஆப் செயலிக்கு உலகம் முழுவதும் பயனர்கள் உள்ளனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ்ஆப் செயலி அவ்வப்போது புதியபுதிய வசதிகளை அறிமுகப்படுத்துவது வழக்கம். அதன்படி அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பயனர்களின் அசெளரிகயங்களைக் கருத்தில்கொண்டு புதிய பல வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஒன்றுக்கும் மேற்பட்ட குழுவை ஒரு குறிப்பிட்ட பெயரின் கீழ் ஒருங்கிணைத்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே அலுவலகம் அல்லது இதர இடங்களில் செயல்பட்டு வரும் ஒரே நபர்களைக் கொண்ட வெவ்வேறு குழுக்கள் பொதுப் பெயரின் கீழ் இயங்குவதற்கான வசதி உருவாக உள்ளது.அதேபோல் உரையாடலில் கருத்துக் கணிப்புகளை நடத்தும் வசதி, விடியோ அழைப்பில் 32 பேர் வரை இணைந்து கொள்வதற்கான வசதி, குழுவில் 1024 பேர் வரை இணைத்துக் கொள்வதற்கான வசதி உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.மேலும் பயனர்களின் தனிப்பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.  …நடப்பு செய்திகள்; திருச்சி: திருச்சி ரயில் நிலையத்தில் ரூ.20 என உயர்த்தப்பட்ட நடைமேடை கட்டணம் ரூ.10 ஆக குறைக்கப்பட்டது. பண்டிகை நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைமேடை கட்டணம் குறைக்கப்பட்டது.
நடப்பு செய்திகள்;

சென்னை: மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி, நீலகிரி, கோவை, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது..

Related Articles

Back to top button
Close
Close