fbpx
REஉலகம்

வடகொரிய அதிபர் இறந்து விட்டாரா? சீன டாக்டர் குழு வடகொரியா விரைந்தது!!

பீஜிங்:

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்தவிட்டதாக ஹாங்காங் சேட்டிலைட் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவரது உடல்நிலை குறித்து அறிய, சீன டாக்டர்கள்  குழு ஒன்று  வடகொரியா விரைந்துள்ளது.

வடகொரிய அதிபர், கிம் ஜாங் உன்னுக்கு சமீபத்தில், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன.

அதிகளவு புகைப்பிடித்தல், உடல்பருமன் மற்றும் அதிக வேலை பளு காரணமாக அதிபர், கிம் ஜாங்  உன்னுக்கு, இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், கிம் இறந்து விட்டதாக, ஹாங்காங் சேட்டிலைட் சேனல் ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

இதனையடுத்து கிம் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள, சீன டாக்டர்கள் குழு வடகொரியா சென்றுள்ளதாக ராய்ட்டர்ஸ்  நிறுவனம்  செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘ வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நிலை குறித்த தகவல்களை அமெரிக்கா தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

அவர்  இறந்து விட்டார் என அதிகாரப்பூர்வ சேனல்கள் எதுவும் உறுதிப்படுத்தபட வில்லை’ என தெரிவித்தார்.

இந்நிலையில், ‘#KIMJONGUNDEAD’ என்ற ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close