fbpx
Others

4 அமெரிக்க வங்கிகள் 11 நாட்களில்திவால்…இந்திய வங்கிகளின் நிலை?

11 நாட்களில் 4 அமெரிக்க வங்கிகள் திவால்.. காத்திருக்கும் பூகம்பம்.. அப்போ இந்திய வங்கிகளின் நிலை?
  • வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 11 நாட்களில் மட்டும் 4 வங்கிகள் திவாலாகியுள்ளது. இப்போது 5ஆவது மற்றொரு வங்கியும் சிக்கலில் உள்ளதுஇது மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நெருக்கடியில் இருந்து இப்போது தான் நாம் மீண்டுள்ளோம். கொரோனா காலத்தில் மக்கள் பலரும் வீட்டிலேயே முடங்கிய நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு நேரடியாகப் பணத்தைக் கொடுத்தன.இதனால் பணப்புழக்கம் அதிகரித்த நிலையில், இது விலைவாசி உயர்வுக்குக் காரணமாக அமைந்து. இதனால் இப்போது விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அந்நாட்டு மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது.இதன் காரணமாக அங்குள்ள பல வங்கிகள் சிக்கலில் உள்ளது. வட்டி விகித உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் அங்குள்ள வங்கிகள் திவாலாகி வருகிறது. இதனால் வெறும் 11 நாட்களில் 4 வங்கிகள் திவாலாகியுள்ளது. மேலும், ஒரு வங்கி சிக்கலில் உள்ளது. பிரச்சினை தொடங்கிய உடனேயே நான்கு வங்கிகள் திவாலாகியுள்ள நிலையில், வரும் நாட்களில் நிலைமை எப்படி இருக்கும் என்று அந்நாட்டு மக்கள் அஞ்சுகின்றனர். இப்போது திவாலாகியுள்ள வங்கிகள் எவை.. அதற்கு என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம்.

சில்வர்கேட் கேபிடல் கார்ப்பரேஷன் தான் முதலில் திவாலான வங்கி. அவர்களுக்கு கிரிப்டோ தொழிலில் இருந்த முதலீடுகள் காரணமாகவே பிரச்சினையில் சிக்கியது. வங்கி திவாலாவதைத் தடுக்க ஃபெடரல் ரிசர்வ் முயன்றது. இருப்பினும், கட்டுப்பாட்டாளர்கள் ஆய்வு, நீதித்துறையின் குற்றவியல் விசாரணை ஆகியவற்றுக்கு மத்தியில் நிறுவனத்தால் சமாளிக்க முடியவில்லை. சில்வர்கேட் எந்த தவறையும் செய்யவில்லை என்றாலும் கூட அதன் பயனாளர்கள் உடனடியாக நிதியைத் திரும்பக் கேட்டனர். இதனால் வங்கி நஷ்டத்தில் பங்குகளை விற்க வேண்டி இருந்தது. ஒரு கட்டத்தில் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் போகவே மார்ச் 8ஆம் தேதி வங்கி திவாலாவதாக அறிவிக்கப்பட்டது.

அடுத்து சிலிக்கான் வேலி வங்கி. அங்கு சிலிக்கான் பள்ளத்தாக்கில் தான் பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தோன்றும். அதன் நிதி விவகாரங்களை சிலிக்கான் வேலி வங்கிதான் கவனிக்கும். ஒரே நேரத்தில் இந்த வங்கியில் பணம் வைத்திருந்த பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றதால் வங்கி இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டது. புதிய டெபாசிட்களை வங்கியால் பெற முடியாமல் போகவே.. புது பங்கு பங்குகளை வெளியிட்டும், பத்திரங்களை விற்றும் நிலைமை சமாளிக்க முயன்றது. இது நிலைமை மேலும் மோசமாக்க வங்கியின் பங்குகளின் மதிப்பு 60% வரை சரிந்தன. இதன் காரணமாக வங்கி திவாலானது. இது அமெரிக்காவின் 16ஆவது பெரிய வங்கியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மார்ச் 12ஆம் தேதி அமெரிக்க வரலாற்றில் மூன்றாவது பெரிய வங்கி திவலாக சிக்னேச்சர் வங்கி மாறியது.. திடீரென வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் பணத்தை எடுப்பது 20% வரை அதிகரித்தே பிரச்சினையாகக் காரணமாக இருந்தது. க்ரிப்டோவில் அவர்கள் முதலீடு மிக குறைவாகவே உள்ளது. இருப்பினும், வங்கி கட்டுப்பாட்டாளர்கள் வங்கியின் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. பலரும் உடனடியாக தங்கள் டெபசிட் தொகையை எடுக்கத் தொடங்கினர். இதனால் வங்கி திவாலாகும் சூழலுக்குத் தள்ளப்பட்டது.

இதையடுத்து சிக்னேச்சர் வங்கியின் டெபாசிட் மற்றும் கடன்களின் ஒரு பகுதியை நியூயார்க் கம்மியூனிட்டி பான்கார்ப்பின் ஃபிளாக்ஸ்டார் வங்கிக்குச் சென்றது. $25 பில்லியன் ரொக்கம், சுமார் $13 பில்லியன் கடன் உட்பட $38 பில்லியன் சொத்துக்களை ஃபிளாக்ஸ்டார் வசம் சென்றது. $34 பில்லியன் வைப்புத்தொகை உட்பட சுமார் $36 பில்லியன் ஃபிளாக்ஸ்டார் பொறுப்பேற்றுக் கொண்டது. சிக்னேச்சரின் கிளைகள் இப்போது ஃபிளாக்ஸ்டார் இருப்பிடங்களாகச் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கிரெடிட் சூயிஸ் குரூப் சிக்கலை எதிர்கொண்டது. இதையடுத்து யுபிஎஸ் க்ரூப் உடன் பேசி மிகப் பெரிய நிதி நெருக்கடியைத் தவிர்த்தனர். வங்கியை அரசு கட்டுக்குள் எடுத்துக் கொள்வது மட்டுமே அதற்கு ருக்கும் ஒரே ஆப்ஷனாக உள்ளது. 166 ஆண்டு பழமையான இந்த வங்கியைக் காப்பாற்ற அதன் தலைமை நிர்வாக அதிகாரி உல்ரிச் கோர்னரின் தொடர்ந்து முயன்றார். இருப்பினும், அந்த வங்கி ஏற்கனவே பல முறைகேடுகளில் சிக்கியது. இதனால் வங்கி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியவில்லை.அடுத்து ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் இதேபோல வாடிக்கையாளர்கள் அச்சத்தில் அதிகம் பணத்தை எடுப்பதால் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. வங்கியைக் காப்பாற்றக் கடந்த வாரம் 11 பேர்30 பில்லியன் டாலரை வங்கியில் முதலீடு செய்தனர். இருப்பினும், அதை நிலைமையை மேம்படுத்தவில்லை. பல ரேட்டிங் நிறுவனங்கள் இந்த வங்கியை டவுன்கிரேட் செய்தன. ஐடி துறையில் வேலை செய்யும் நபர்களுக்கு வங்கி சேவையைத் தருவதே இந்த வங்கியின் வேலையாகும். இதுவும் இப்போது மோசமான சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.

அமெரிக்க வங்கிகளே இப்படி அடுத்தடுத்து சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்திய வங்கிகள் குறித்தும் மக்கள் அஞ்சுகின்றனர். இருப்பினும், இந்தியாவில் வங்கிகள் திவாலாக எல்லாம் வாய்ப்பு குறைவே என்றே கூறப்படுகிறது. இது குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி, “கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு இப்போது உலக பொருளாதாரம் சிக்கலில் இருந்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. மேலும் வங்கி அமைப்பும் வலுவாக இருக்கிறது. இதுவே நமது அமைப்புகளின் பலம். நமது ஜனநாயக அமைப்புகளின் வெற்றியைக் கண்டு பொறாமை கொள்வோர் அதைத் தாக்கும் கருத்துகளைக் கூறுகின்றனர். இருந்தாலும், இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, இந்தியா தனது இலக்கை முழு வேகத்தில் சென்று தனது இலக்குகளை அடையும்” என்று அவர் தெரிவித்தார்”

Related Articles

Back to top button
Close
Close