fbpx
Others

4 நாள் பயணமாக இந்திய குடியரசு தலைவர் தமிழகம் வருகை….

திரௌபதி முர்மு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு 4 நாள் பயணமாக தமிழகம் வருகைத் தர இருக்கிறார். நாளை மறுநாள் 27 -ம் தேதி டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை மாவட்டம் சூலூர் விமான நிலையத்தை வந்தடைய இருக்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவன் செல்கிறார். அங்கு தங்கும் குடியரசு தலைவர், 28 -ம் தேதி குன்னூர், வெலிங்டன் முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த இருக்கிறார்.சாலை மார்க்கமாகவே மீண்டும் ராஜ்பவன் திரும்பும் அவர், 29 தேதி ராஜ்பவனில் தங்கி பழங்குடி மக்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாட இருக்கிறார். 30 – ம் தேதி ஊட்டியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சூலூர் விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள 9 – வதுபாதுகாப்பு முன்னேற்பாடுகள் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இருக்கிறார். அங்கிருந்து மீண்டும் டெல்லி திரும்புகிறார் ‌குடியரசு தலைவர் வருகை குறித்து பேசிய நீலகிரி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், ” தமிழகத்தில் நடைபெற இருக்கும் இரண்டு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க இருக்கிறார். வெலிங்டனில் ராணுவம் தரப்பில் வரவேற்பு ஒத்திகை நடைபெற்று வருகின்றன. ஹெலிபேட்முதல்ராஜ்பவன்வரைமுழுமையாககாவல்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.முக்கியஇடங்களில்வெடிகுண்டுசெயலிழப்புநிபுணர்கள்சோதனைமேற்கொண்டுவருகின்றனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளது. காலநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டால் மாற்று இடத்தில் ஹெலிகாப்டரை தரையிறக்கவும் முன்னேற்பாடுகள் தயாராக உள்ளன” என்றனர்.

.

Related Articles

Back to top button
Close
Close