fbpx
Others

சட்டக் கல்லூரிகளில் நீதிமன்ற தீர்ப்புகளை பாடங்களாக்க வேண்டும்

 புதுச்சேரி சட்டக்கல்லூரிகளில் நீதிமன்ற தீர்ப்புகளை பாடங்களாக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் கூறினார். பொன்விழா புதுவை காலாப்பட்டு டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியின் பொன்விழா கொண்டாட்ட நிறைவு விழா கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை தாங்கினார். புதுவை அரசின் தலைமை செயலாளர் (பொறுப்பு) பிரசாந்த் கோயல் வரவேற்றுப் பேசினார். விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் கலந்துகொண்டுசட்டக் கல்லூரிகளில் தீர்ப்புகளை பாடங்களாக்க வேண்டும் விழாமலரை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:- இந்த சட்டக்கல்லூரியின் பொன்விழாவுக்கு நான் வரக்காரணம் இந்த கல்லூரியின் முன்னாள் முதல்வர் மாதவ் மேனன்தான். அவர் சட்டக்கல்வியில் மிகப்பெரிய ஆள் ஆவார். அவர்தான் சட்டக்கல்வியில் அடிப்படை மாற்றங்களை கொண்டுவந்தார். அவரல்தான் தேசிய சட்ட பல்கலைக்கழகம் உருவானது. 7 ஐகோர்ட்டு நீதிபதிகள் இந்த சட்டக்கல்லூரியில் படித்தவர்கள்தான் முதல்-அமைச்சராகவும், சட்ட அமைச்சராகவும் உள்ளனர். இங்கு அடிப்படை சட்டங்கள் கற்றுத்தரப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக இந்த கல்லூரி நிறைய சட்ட பட்டதாரிகளை உருவாக்கி உள்ளது. எண்ணிக்கையை பார்ப்பதைவிட தரத்தை பார்க்கவேண்டும். இந்த கல்லூரியில் படித்த 7 பேர் ஐகோர்ட்டு நீதிபதிகளாக உள்ளனர். கவர்னர் பேசும்போது, நீதித்துறைக்கு நிறைய பெண்கள் வரவேண்டும் என்று குறிப்பிட்டார். எனக்கு தெரிந்தவரையில் ஜார்கண்ட், தமிழ்நாடு, ஒரிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அதிக அளவில் பெண் நீதிபதிகள் உள்ளனர். ராஜஸ்தானில் 180 நீதிபதிகளில் 109 பேர் பெண்களாக உள்ளனர். விரைவில் அதிக அளவில் பெண்கள் நீதித்துறையில் பதவி வகிப்பார்கள். சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி. இப்போது 4 பெண் நீதிபதிகள் உள்ளனர். தீர்ப்புகள் பாடங்களாக… இந்த கல்லூரி மாதிரியுள்ள நிறுவனங்கள் சவால்களை எதிர்கொள்ள கற்றத்தர வேண்டும். இந்த கல்லூரியில் தீர்ப்பு பற்றி கற்றுத் தருகிறார்களா? என்பது தெரியவில்லை. தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் தீர்ப்புகள் பற்றி கற்றுத் தருகிறார்கள்.  சட்டப்படிப்பு படித்தவர்கள் வக்கீல்களாக பணியாற்றாமல் நீதிபதி ஆகலாம் என்ற பின்னர் நிறைய பேர் நீதித்துறை பதவிக்கு வருகிறார்கள். அதனால் அனைத்து கல்லூரிகளிலும் தீர்ப்புகளைப்பற்றி பாடம் சொல்லித் தந்தால் நன்றாக இருக்கும். இது எனது தனிப்பட்ட கருத்து. இவ்வாறு அவர் பேசினார்.  சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ராமசுப்ரமணியன் பேசியதாவது:- புதுவை சட்டக்கல்லூரி 50 ஆண்டுகளை கடந்துள்ளது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசும்போது, புதுவைக்கு ஐகோர்ட்டு கிளை வேண்டும் என்று கேட்டார். சுப்ரீம் கோர்ட்டின் 3 நீதிபதிகள், ஐகோர்ட்டின் 15 நீதிபதிகள் உங்களை பாராட்ட வந்துள்ளனர். இதைவிட வேறு என்ன வேண்டும். தமிழகத்தில் 5 சட்ட பல்கலைக்கழகங்கள், 10-க்கும் மேற்பட்ட சட்டக்கல்லூரிகள் உள்ளன. இங்கிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சட்டப்படிப்பு முடித்தவர்கள் வருகிறார்கள். ஆனால் புதுவையில் ஒரேயொரு சட்டக்கல்லூரிதான் உள்ளது. அப்படி இருந்தும் ஐகோர்ட்டின் 56 நீதிபதிகளில் 7 பேர் புதுவை சட்டக்கல்லூரியில் படித்தவர்களாக உள்ளனர். புதுவையில் கட்ட பல்கலைக்கழகம் தொடங்கினால் போட்டி இன்னும் அதிகமாக இருக்கும். இங்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் பேசும் மக்கள் வசிக்கின்றனர் என்பதால் இது ஒரு தென் இந்தியா. இங்குதான் அரவிந்தர், பாரதியார் போன்ற புரட்சியாளர்கள் வாழ்ந்தார்கள் என்பதால் மினி இந்தியா. அவர்களை ஆன்மிக வழிக்கு கொண்டு வந்தது புதுச்சேரிதான். இங்கு வருபவர்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். புதுச்சேரி ஒரு சர்வதேச நகரம். இவ்வாறு அவர் பேசினார். ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பேசுகையில், புதுவை சட்டக்கல்லூரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் அறிவு, செயல்பாட்டை வளர்த்து வருகிறது. இங்கு படித்த 7 பேர் ஐகோர்ட்டு நீதிபதிகளாக உள்ளனர் என்பதே பாராட்டுக்குரியது. இங்கு படித்த மேலும் பலர் நீதிபதி பதவிகளில் சேருவார்கள். நீதித்துறையில் இந்த நிறுவனத்தின் பங்களிப்பு என்பது மதிப்பு மிக்கதாக உள்ளது என்றார். விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஐகோர்ட்டு நீதிபதி ராஜா, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், பாஸ்கர், சம்பத், கே.எஸ்.பி.ரமேஷ், அசோக்பாபு, கல்லூரியின் முன்னாள் முதல்வர் பட், வக்கீல் சங்க தலைவர் குமரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கல்லூரி முதல்வர் ஸ்ரீனிவாசன் நன்றி கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close