fbpx
Others

பிரதமர் மற்றும் ரயில்வே துறை அமைச்சர்க்கு கோரிக்கை மனு ?

ரயில்களில், மூத்த குடிமக்களுக்கு (இந்திய கிழவன்களுக்கு அல்லது சாகப் போகும் பொருளாதார ரீதியாக உபயோகமில்லாத பெருசுகள் என்று இந்திய ரயில்வே துறை நினைப்பதாக எடுத்துக் கொள்ளலாம் ) கொடுக்கப்பட்டு வந்த ரயில்வே முதியோர் சலுகை மீண்டும் தொடரும் முடிவில் அரசு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.அதற்காக நன்றி ?மத்திய அரசுக்கு ,ரயில்வே துறை அமைச்சருக்கும் நாங்கள் , நாட்டுப்பற்று மிக்க பொதுமக்கள் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளோம்.நமது இந்திய திருநாட்டில் பிறந்து அமைப்பு சாரா தொழிலாளர் ஆக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கொத்தனார் ,ஒரு மெக்கானிக், ஒரு டாக்ஸி டிரைவர், ஆட்டோ டிரைவர், ஒரு சலவைத் தொழிலாளி, சுமை தூக்கும் தொழிலாளி,பெயிண்டர், ஒரு வெல்டர், ஒரு டிரைவர், ஒரு சமையல்காரர், இப்படிப் பட்ட பல பல தொழில்களைச் செய்து நமது நாட்டுக்காக உண்மையாக வாழும் அமைப்புசாரா தொழிலாளர் சார்ந்த இந்திய குடிமக்கள்உழைத்து சம்பாதித்து தன் குழந்தைகளையும், குடும்பத்தையும் காப்பாற்றி, நமது நாட்டுக்காக உண்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.நாட்டுக்கு துரோகம் செய்பவர்கள் அவர்கள் அல்ல அரசியல்வாதிகள் மட்டுமே?அரசின் அனைத்து: நேர்முக மற்றும் மறைமுக வரிகளும் ,GST உட்பட அனைத்தையும் செலுத்தி வாழ்ந்து உழைத்து வாழ முடியாத வயதான காலத்தில் சாகும்போது இந்த இந்திய ரயில்வே துறை அமைச்சகம் அவர்களுக்கு எந்த சலுகையும் செய்யாதா?ஓய்வு பெற்ற ரயில்வே அரசு அதிகாரிகளுக்கும் ரயில்வே சலுகை கொடுக்கும்? ஓய்வு பெற்ற எம்பி எம்எல்ஏக்கள் வயதான காலத்திலும் சலுகை, அனுபவிக்கலாம்?அனைத்து அரசியல்வாதிகளுக்கும் (,V.I.P) சலுகை ரயில் பயணம் ?அனைத்து மந்திரிகளுக்கும் எம்பி எம்எல்ஏக்கள் சலுகை வயதான காலத்தில் சலுகையில் ரயில் பயணம்?ரயில்வே உயர்தர அதிகாரிகளுக்கும் , ரயில்வேயில் வேலை செய்யும்: மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் சலுகை ?

ஆனால் நம்மைப் போன்ற நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள,பொதுமக்களின் குடும்பங்களுக்கு எந்த சலுகையும் கிடையாது.

மாண்புமிகு மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சர்களுக்கும் அவர்களுக்கு அன்பான பணிவான கோரிக்கை மனு ,

உழைத்து உழைத்து ஓய்ந்து உழைக்க முடியாத வயதான காலத்தில் அரசு கொடுக்கும் சலுகைகளை தட்டிப் பறித்து விடா முயற்சி செய்ய வேண்டாம்.

தயவுசெய்து மாண்புமிகு மதிப்பிற்குரிய பாரதப் பிரதமர் அவர்கள், மற்றும் ரயில்வே அமைச்சகம் அவர்களுக்குரயில்வே நஷ்டத்தில் இயங்குவதால் முதியோர்களுக்கான சலுகையை ரத்து செய்வதாக அறிவித்தது உண்மையாக இருந்தால்அனைவருக்கும் சலுகை ரத்து செய்ய செய்யலாம் , அப்படிச் செய்தால் அது உண்மையான நியாயமான நடவடிக்கை.அப்போது நமது ரயில்வே அமைச்சகமும் நமது நாடு முன்னேறும் .பொதுமக்களுக்கு ரயில்வே துறை எந்த சலுகை கொடுக்க மாட்டோம்.ஆனால் தேவைப்படுபவர்களுக்கு ,உயரதிகாரிகளுக்கு எம்பி எம்எல்ஏக்கள் சலு கை கொடுப்போம் என்றால் அது உண்மையான நியாயமான அரசின் நடவடிக்கையா? மனசாட்சியுடன் சிந்தித்துப் பாருங்கள்.பொதுமக்கள் சார்பாக எதற்கும் தயாராக இருக்கும் கன்னியாகுமரி மாவட்ட ஒரு முதியோரின் பணிவான கோரிக்கை மனு.

Related Articles

Back to top button
Close
Close