fbpx
Others

மின்னணு தராசு 200பறிமுதல்–திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் மறுமுத்திரையிடாமல் இருந்த 200 மின்னணு தராசுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளில் சட்டமுறை எடையுளவு சட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளபட்டது. இதில் திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் துணை ஆய்வாளர் மனோகரன், உதவி ஆய்வாளர்கள் ஆத்திப்பழம், சாந்தி, சுபாஷ்சந்தர், சிவகுமார் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது மறுமுத்திரையிடாமல் பயன்பாட்டில் வைக்கப்பட்டு இருந்த 20 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்கள் மீது சட்டமுறை எடையளவு சட்டம் 2009-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி கூறுகையில், சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் இது போன்று திடீராய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். வணிகர்கள் நிறுவனங்களின் பயன்படுத்தப்படும் எடையளவுகளை உரிய காலத்திற்குள் மறுமுத்திரையிட்டு மறுபரிசீலனை சான்றுகளை நிறுவனங்களில் நன்கு தொியும் படி காட்டி வைக்க வேண்டும். மறுமுத்திரையிடாமல் பயன்பாட்டில் உள்ள தராசுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்

Related Articles

Back to top button
Close
Close