3-வது மொழி கற்கும் வாய்ப்பை மாணவர்களுக்கு மறுப்பது சமூக அநீதி..
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும், மூன்றாவது மொழி கற்கும் வாய்ப்பை மறுப்பது சமூக அநீதியாகும். அரசு பள்ளிகளை மேம்படுத்த ‘பி.எம்.ஸ்ரீ’ என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் வளர்ச்சிக்காக,
‘ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்’ (எஸ்.எஸ்.ஏ) கீழ் மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்த மாட்டோம். ஆனால், திட்டத்துக்கான நிதி மட்டும் வேண்டும்எனதிமுகஅரசுகேட்கிறது.திட்டத்தைசெயல்படுத்தினால் தான், சட்டப்படி நிதி வழங்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் கூறியிருக்கிறார். இதைவழக்கம்போலதிரித்து,மொழிஅரசியலையும், பிரிவினைவாதஅரசியலையும்முதல்வர்மு.க.ஸ்டாலின்மற்றும்திமுகவினர்செய்துவருகின்றனர்.தாய்மொழி,ஆங்கிலம்,அதற்குஅடுத்துமாணவர்கள்விரும்பும்மொழிஎன்றுதான்புதியகல்விக்கொள்கையில்கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் தவிர, தனியார் பள்ளிகள் அனைத்திலும் மும்மொழி கொள்கை இருக்கிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அனைத்தும் மும்மொழி கொள்கையை பின்பற்றுகின்றன. முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினர் உட்பட திமுகவினர்நடத்தும்பள்ளிகள்அனைத்தும்சி.பி.எஸ்.இ.பள்ளிகள்என்பதுகுறிப்பிடத்தக்கது.பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினரும் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மும்மொழி கொள்கை கூடாது என்கிறது திமுகஅரசு.இது,ஒருகண்ணில்வெண்ணையும் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைக்கும்செயல்.தமிழகத்தில்ஏற்கெனவேநடைமுறையில் இருக்கும் மும்மொழிக் கொள்கையை, அரசுப் பள்ளி மாணவர்களுக்கும்விரிவுபடுத்தவேண்டும். இவ்வாறுபாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.