fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

ஏழை மக்களுக்குப் பயன்படும் நலத்திட்ட உதவிகள் எதுவும் இல்லை;ப.சிதம்பரம்!

Former minister Chidambaram condemns

டெல்லி:

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதுவும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்து உள்ளார்.

பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தவாறு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு திட்டங்களை நேற்று அறிவித்தார். இதுகுறித்து நாடு முழுவதும் பெருத்த விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இது குறித்து முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது; அவரது அறிவிப்பில் சிறு தொழில் நிறுவனங்களுக்கு அடமானம் இல்லாமல் 3.4 லட்சம் கோடி கடன் தருவதாக அறிவித்திருந்தார்.

அதைத் தவிர ஏழை மக்களுக்குப் பயன்படும் வகையில் எந்தவொரு நலத்திட்ட உதவிகளும் இல்லை என்கிறார் சிதம்பரம். வீடியோ கான்பரன்ஸ் மூலமாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தொடர்ந்து கூறியதாவது:

லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசி, பட்டினியுடன் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்றனர். அவர்களுக்காக இந்த நிதித் தொகுப்பில் ஒன்றுமே இல்லை.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5,000 அளித்தால் அரசுக்கு ரூ.65,000 கோடி மட்டுமே செலவாகும். 13 கோடி குடும்பங்களின் கையில் பணத்தைக் கொடுப்பதே அரசாங்கம் செய்ய வேண்டியதாகும்.

ஒரு அரசாங்கம் என்பது அதிக செலவு செய்து அதிக கடன் வாங்க வேண்டும் ஆனால், அவ்வாறு செய்ய தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close