fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

கள்ளச்சாராயத்தை ஒழிக்கவே டாஸ்மாக் ஓபன்…! அமைச்சரின் அசத்தல் விளக்கம்…!

Minister sellur raju explains about tasmac opening

சென்னை: குடிமகன்கள் பாதிக்கப்படக்கூடாது, பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தான் டாஸ்மாக் கடை திறக்கப்படுகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், அரசின் அறிவிப்பு குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: மதுக்கடைகளை திறக்கும் முடிவு மனமுவந்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல. கள்ள சாராயத்தை ஒழிப்பதற்காகவும், வெளிமாநிலங்களுக்கு சென்று மது வாங்குவதை தடுப்பதற்காகவும்தான் திறக்க முடிவு செய்யப்பட்டது.

எல்லாரும் மதுக்கடையை திறந்த பின் நாம் திறக்காமல் இருக்க முடியாது. குடிமகன்கள் பாதிக்கப்படக்கூடாது. பொருளாதாரம் பாதிக்கப்படக்கூடாது. அதற்காக தான் டாஸ்மாக் கடையை திறக்க முதல்வர் முடிவு செய்தார் என்று கூறினார்.

Tags

Related Articles

Back to top button
Close
Close