fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் – தொழில்சங்கத்தினர் அறிவிப்பு

ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படாததால் சென்னை மாநகர போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று திடீரென வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த போராட்டத்தில் சிஐடியு மற்றும் திமுக தொழில்சங்கத்தைச சேர்ந்த ஊழியர்களும் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தால் பூந்தமல்லி, ஐயப்பன்தாங்கல், ஆவடி, அம்பத்தூர், அண்ணா நகர் என பல்வேறு பணிமனைகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.இவ்வாறு பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டிருந்ததால் பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ , மாணவிகளும், வேலைக்கு செல்வோரும் என பல ஆயிரம் கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

அதனால் ஊதியம் வழங்கப்படாத போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்று இரவுக்குள் ஊதியம் வழங்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எனவே வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்களின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளபட்டதால் தற்போது வேலைநிறுத்தப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொமுச பொருளாளர் நடராஜர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது, ” ஜூன் மாத ஊதியத்தில் நிலுவையில் உள்ள 38% தொகை இன்று மாலைக்குள் வழங்கப்படும் என்று உறுதிமொழி வழங்கப்பட்டதை அடுத்து வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் , தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு திரும்பவேண்டும் ” என்று தொழில்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close