fbpx
RETamil Newsதமிழ்நாடு

இந்த வருடம் மட்டும் ஏன் கடும் பனி பொலிவு? வானிலை ஆய்வு மையம் விளக்கம்.

தமிழகத்தில் எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் மட்டும் வழக்கத்திற்கு மாறாக கடும் பனி பொலிவு காணப்படுகிறது.தமிழகத்தில் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் குளிர்காலம் ஜனவரி மாதம் வரை தொடர்ந்து இருக்கும். அதிகாலையில் அதிக குளிருடன் பனிமூட்டமாக காணப்படுவது வழக்கம்.

ஆனால் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக கடும் தமிழகத்தில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக சென்னை , காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. மேலும் ஊட்டி, கொடைக்கானல் , வால்பாறை போன்ற மலை பிரதேசங்களில் கடும் உறைப்பனி நிலவுவதால் மக்களின் இயல்பான வாழ்கை கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

எனவே இத்தகைய கடும் பனிபொழிவிற்கான காரணம் பற்றி , சென்னை வானிலை ஆய்வுமைய அதிகாரி கூறியதாவது ;

நம் நாட்டிற்கு தற்போது எது பனிப்பொழிவு காலம் தான். ஆனால் தற்போது மேகக்கூட்டங்கள் குறைவாக இருப்பதால் , பூமியில் வெப்பம் தனித்து காணப்படுகிறது.அதோடு இந்த நேரம் நமக்கு வடக்கில் இருந்து வரும் குளிர்ந்த காற்றுடன் , கிழக்கு திசை காற்றும் சேர்ந்து வருவதால் கடும் அதிக பனிப்பொழிவு காணப்படுகிறது.

இந்த பனிப்பொழிவு இன்னும் 10 நாட்களுக்கு தொடரும் என்றும் அதன் பின் வழக்கமான சூழலை உணரலாம் என்றும் கூறப்படுகிறது. மழைக்கான வாய்ப்பு துளி கூட கிடையாது என்றும் , அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close