fbpx
Others

ராகுல் காந்தி–பாஜக அரசின் வெறுப்புஅரசியலேமணிப்பூர் வன்முறைக்குகாரணம்

 மணிப்பூர் வன்முறைக்கு பாஜக அரசின் வெறுப்பு அரசியலே காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மணிப்பூரில் மே மாதம் 3ம் தேதி இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதனால் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். மேலும் 310 பேர் காயமடைந்தனர். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதி நிலவி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் வன்முறை தலைதூக்கதொடங்கியுள்ளது. .இதனால் அந்த அங்கு மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் மணிப்பூர் வன்முறைக்கு பாஜக அரசின் வெறுப்பு அரசியலே காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; பாஜகவின் வெறுப்பு அரசியலால் மணிப்பூரில் 40 நாட்களாக நடக்கும் வன்முறையில் 100 பேர் இறந்துள்ளனர். இந்தியாவை தோல்வியடையச் செய்துவிட்டு பிரதமர் முற்றிலும் மவுனம் காக்கிறார். மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க அனைத்து கட்சிகளும் குழுவை அம்மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close