fbpx
Others

தேனி மாவட்ட ஆட்சியர் நேரடி பார்வைக்கு…?

தேனி:கூடலூரில் தன் விவசாய நிலத்திற்கு களைக்கொல்லி பூச்சி மருந்து தெளித்து உயிரிழந்த விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென தமிழக முதல்வருக்கு வலுக்கும் கோரிக்கைகள்:  விவசாயிகளின் நலனில் அஜாக்கிரதையாக இருந்து வரும் வேளாண்துறை. அத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உரம்,பூச்சி மருந்து கடைகள் மீது சமூக நலப் பற்றாளர்கள் ஆதங்கத்துடன் பகீர் குற்றச்சாட்டு.?   வேளாண்மையை காக்க தவறிய வேளாண் துறை எதற்கு….?  விவசாயிகளின் நலனை காக்கத் தவறிய விவசாயத்துறை எதற்கு…?  இதே கூடலூரில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு நெல் சேகரிப்பு நிலையத்தின் இலஞ்ச, இலாவண்ய விவகாரத்தில் அரங்கேறிய அவலங்களையும் கண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்து அவர்களது நலனை காத்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் உயிரிழந்தும் விவசாயிகளின் நலனுக்காகவும் குறிப்பாக அவர்களது குடும்ப நலனுக்காகவும் குரல் கொடுக்காத விவசாய சங்கங்கள் இருந்தும் என்ன பயன்…?  அவரு நல்லது செய்வாரு… இவரு அவர விடவும் இன்னமும் கூடுதலாக நல்லதையே செய்வாரு….என வாக்கும் அளித்து,பிறப்பில் இருந்து இறப்பு வரை தும்மினாலும் வரி/வட்டி, வாமிட் எடுத்தாலும் வரி/வட்டி எனதாக அனைத்து வரிகளையும் கொடுத்து,மக்களது நலன் காத்திட வேண்டி மக்களது வரிப்பணத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து நலன் சார் திட்டங்களையும் வகுத்து அந்தத் திட்டங்களை கண்காணிப்பு செய்வதற்காக மக்களது வரிப்பணத்தில் சம்பளமாக அரசு சம்பளம் பெற்றுக் கொண்டு மக்களது உயிர்களையே காவு வாங்கினால் இது எவ்விதத்தில் நியாயம்…?தமிழகத்தில் சாமானிய மக்கள் தொட்டு அனைத்து தரப்பு மக்களின் நலன் காத்திட வேண்டி 55-ற்கும் மேற்பட்ட துறைகள் இருந்து வருகிறது.விபத்து,உயிரிழப்பு, நஷ்டம் இது போன்ற ஏதாவது ஒரு அசம்பாவிதங்கள் அரங்கேறிய பின்பு மேற்கண்ட துறைகளினால் வெற்றுக் கண் துடைத்து நீலிக் கண்ணீர் வடிப்ப்பதற்காக நடத்தப்படும் திடீர் கள ஆய்வு,தடுப்பு நடவடிக்கை, தண்டனை,வழக்கு இது போன்ற செயல்களில் போட்டோ ஷாப் எனும் ஒரு நாள் நாடகத்தை மட்டுமே மேற்கண்ட துறைகள் அரங்கேற்றி வருகிறது என சொன்னால் அது மிகப் பொருந்தும்.மக்கள் நலன் சார்ந்த திட்டம் அதன் வழிவந்த நிதிகள் இது போன்ற எல்லாவற்றிலும் மக்கள் நலனை துளி அளவு கருதாமல் அன்றாடம் போட்டோ ஷாப் ஒன்றை மட்டுமே அரங்கேற்றி வரும் மேற்கண்ட துறைகளினால் இன்னும் எத்தனை உயிர்களை சாவு வாங்க போகின்றோம் என்பது நம்மை படைத்த இறைவனுக்கே வெளிச்சம்…!?   தேனி மாவட்டம், கூடலூர் நகராட்சியில் விவசாயிகள் இருவர் தங்களது விவசாய நிலத்தில் விளைந்துள்ள நெல் பயிர்களுக்கு களைக்கொல்லி பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அரசு அனுமதி பெற்ற, அரசின் சில பல துறைகளில் ஆசி பெற்ற உரக்கடைகளில் வாங்கிய களைக்கொல்லி பூச்சி மருந்தானது கொடிய நெடியுடன் விவசாயிகளது உடம்பில் ஏறி அந்த விவசாயிகள் மயக்கம் போட்டு பாண்டியன், குணசேகரன் என்ற இரு விவசாயிகள் பலியான சம்பவம் கூடலூர் மக்கள் மத்தியில் குறிப்பாக விவசாயிகள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகின்றன.இது மட்டும் அல்லாமல் கூடலூரில் பலியான இரு விவசாயிகளுக்கு முன்பாகவே காமையகவுண்டன்பட்டியை சேர்ந்த ஒரு விவசாயியும் இதே பாணியில் களைக்கொல்லி பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது உயிரிழந்தார் என்பதும் நமக்கு கிடைத்த கூடுதல் தகவல்..

கேள்வி:

1.விவசாயிகளுக்கு தகுந்த அறிவுரைகள் கலந்த ஆலோசனை வழங்குவது யார்..? இது மாதிரியான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை ஏன் கடந்த காலங்களில் வழங்கப்படவில்லை…?

2.ஒரு மனித உயிர் இருக்கும்போது மேற்கொள்ளப்படாத ஆய்வு மற்றும் களஆய்வுகள்,ஒரு மனித உயிர் காவு வாங்கப்பட்ட பின்பு ஆய்வு மற்றும் கள ஆய்வுகளில் ஈடுபடுவதென்பது,

கிராமங்களில் ஒரு சொலவடை ஒன்று உண்டு.யாதெனில், இருக்கும் போது ஒரு வாய் தண்ணீர் கொடுக்க ஆள் இல்லையாம்… இறந்த பின்பு பால், அறுசுவை உணவு படையல், மற்றும் 7-ஆம் நாள் கறி சோறு யார் கேட்டது…?

3.ஓர் உயிரை காவு கொடுத்த பின்பு தரக்கட்டுப்பாடு உள்ளிட்ட ஆய்வு செய்வதென்பது மக்கள் வரிப்பணத்தில் ஒரு துறையையும் உருவாக்கி, அதற்கென ஓர் அலுவலகத்தையும் கொடுத்து, சாமானிய மக்களின் நலன் சார்ந்த சேவைகள் செய்திட அலுவலர்களாக பணிபுரிவதற்கு உண்டான சம்பளமும் கொடுப்பது ஓர் உயிரை காவு கொடுத்த பின்பு ஆற,அமர சவுகாரியமாக சென்று கள ஆய்வு செய்வதற்காகவா?

இது மாதிரியாக அவ்வப்போது ஆய்வு செய்திட தங்களது பணிகளை சிரமம் இன்றி மேற்கொள்ள பணியாளர்கள் பற்றாக்குறை, போதிய ஒத்துழைப்பு இல்லை,ஆய்வு செய்திட வேண்டி வாகன வசதிகள் இல்லை,

இது மாதிரியாக தமிழக அரசு மீது சப்பையான சாக்கு போக்குகளை சொல்லிக்கொண்டு திரியாமல்,

உங்களுக்கு ஓர் தேவை எனில் உங்களுக்கான சங்கங்களை வைத்து தமிழக கோட்டை நோக்கியும், டெல்லி செங்கோட்டை நோக்கியும் போராட்டம் ஆர்ப்பாட்டம் என களம் இறங்க தெரிந்த உங்களுக்கு….?

அதாவது மக்களது வியர்வை கலந்த குருதியுடன் வரியாக அளித்து வரும் பணத்தில் சம்பளம் பெற்று வரும் உங்களுக்கு அச்சாமானிய மக்களின் தேவைகளுக்காகவும் ஒரு நாள் போராட்ட களத்தில் இறங்கினால் தாங்கள் எழுப்பும் கோரிக்கை மற்றும் போராட்டம் நியாயமானதாக இருக்கும்.அதை பலதரப்பட்ட மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

அதை விடுத்து, சாமானியக்கு வழிந்தால் அதை தக்காளி தொக்கு… தங்களுக்கு வழிந்தால் அது இரத்தம் எனும் எண்ணத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை எனக் கூவுவதினால் என்ன நியாயம்…?

இதற்கென ஒரு துறை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட அலுவல் பணியாளர்கள் அவசியமா?

நெடிகூடிய, வீரியம் மிகுந்த மருந்து மற்றும் உரம் விற்பனை செய்ய மேற்கண்ட உரக்கடைகளுக்கு துறை ரீதியாக யார் அனுமதி கொடுத்தது? இதற்கு அனுமதி தேவை இல்லையெனில் கடைக்காரர்களுக்கு தகுந்த ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கினீர்களா?

மேற்கூறியதை ஏதும் மேற்கொள்ளாத பட்சத்தில் துறை ரீதியாக அவ்வப்போது விழிப்புணர்வு கூட்டம் அமைத்து விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கி இருக்க வேண்டும்.

மேலும், சம்பந்தப்பட்ட துறையினர் 1000-த்திற்கும் அதிகமாக உள்ள தேனி மாவட்ட உரக்கடைகளுக்கு அவ்வப்போது அறிவுரை கலந்த ஆலோசனைகள் வழங்கி இருக்க வேண்டும்.

இதையெல்லாம் தவிர்த்து விட்டு சம்பந்தபட்ட வேளாண் துறையினர் தற்போது விவசாயிகளின் மேல் பழியை சுமத்துவது போல் விவசாயிகள் தகுந்த ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் பெற வேண்டும். களைக்கொல்லி பூச்சி மருந்துகளை தெளித்த முன்போ, பின்போ மது அருந்த கூடாது என தற்போது உயிழப்புக்கள் ஏற்பட்ட பின்பு அறிவுரைகள் வழங்குவது என்பது எவ்விதத்தில் நியாயம்…?

ஏற்கனவே விவசாயி சேற்றிலும் அடி வாங்கி, சோற்றிலும் அடி வாங்கி தகுந்த மழையின்மை, பொருளாதாரம், வேலையாள் பற்றாக்குறை, மின்தடை, தண்ணீர் இல்லாமை போன்ற பல இன்னல்களுக்கு மத்தியில் உயிரோடு இருந்து விவசாயம் செய்து வரும் இந்த வேளையில் நம்பகமான உரக்கடையில் பூச்சி மருந்து வாங்கி அதை தெளித்து விவசாயி பலியான சம்பவத்திற்கு யார் பொறுப்பு…?

கூடலூரில் தன் விவசாய நிலத்திற்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து மயக்கத்துடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்த குணசேகரன் என்ற விவசாயிக்கும்,

உயிரிழந்த விவசாயி குணசேகரன் அவர்களது மனைவி மற்றும் பெண் குழந்தைக்கும்,

கடந்த 07 நாட்களாக உயிருக்காக போராடி அக்.10 இன்று உயிரிழந்த பாண்டியன் என்ற விவசாயிக்கும், அவரது மனைவி மற்றும் திருமண வயதை எட்டிய 27 வயது ஒரு பெண் மற்றும் 23 வயதான ஒரு ஆண் என இரண்டு நபர்களுக்கும்,

கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்த விவசாயிக்கு 10 லட்சம் கொடுத்த நமது தமிழகத்தில்,

அதே தமிழகத்தில் அங்கம் வகித்துள்ள கூடலூரில் உயிரிழந்த இரண்டு விவசாயிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இழப்பீடு தருவது யார்?

உயிரிழந்த விவசாயிகளினால் சில,பல துறைகளில் உள்ள முன்னோடிகளுக்கு மட்டும் உரிய நிவாரணம் அவர்கள் கேட்காமலே சென்று விட்டதாகவும் நமக்கு கிடைத்த கூடுதல் தகவல்…

பிணத்தை வைத்து பணம் பார்ப்பவர்களும் நமது தமிழகத்தில் பஞ்சமில்லை போல...

சங்கங்களுக்கு பஞ்சம் இல்லாத கூடலூர் நகராட்சியைத் தொட்டு,

தேனி மாவட்டம் உட்பட தமிழக விவசாயிகள் குரல் கொடுக்காதது விவசாயிகள் நலன் சார்ந்த சங்கங்கள் தமிழகத்தில் இருக்கின்றனவா என்ற ஐயம் தற்போது சமூக நல பற்றாளர்கள் மத்தியில் எழுத் தொடங்கி உள்ளது.

குருதி கலந்து வியர்வை சிந்தும் விவசாயிகளின் நலனுக்காக உழவர் மற்றும் வேளாண் துறைகள் தமிழகத்தில் குறிப்பாக தேனி மாவட்டத்தில் இயங்கிவருகிறதா

மாறாக, விவசாயிகளின் பெயரில் விவசாயிகளின் நலன் காத்து வருகின்றோம் என்ற போர்வையில் மேற்கண்ட துறைகள் தற்போதும் இதற்கு முன்பும் இயங்கி வருகின்றதா என்றதன் ஐயம் தற்போது விவசாயிகளிடத்தில் வலுவாக எழுத்தொடங்கி உள்ளது என்பது மட்டும் நிதர்ஷனமான உண்மை.

கூடலூரில் விவசாயிகள் உயிரிழப்பிற்கு பின்பு உரம், பூச்சி மருந்து தரக்கட்டுப்பாடு என்ற போர்வையில் தலை காட்டும் துறைசார்ந்த கள ஆய்வு அதிகாரிகள் விவசாயிகள் உயிரை இழக்கும் முன்பு இதே உரம் பூச்சி மருந்து கடைகளில் தரம் சார்ந்த கட்டுப்பாடு உள்ளிட்ட ஆய்வு செய்யாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததன் பலனாக இருவர் பலியாகி உள்ளனர் என தற்போது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பூச்சி, மருந்து மற்றும் உரக்கடைகளினால் ஒரு வித பீதியுடன் பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

வேளாண் துறை மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய உரக்கடைகளின் அஜாக்கிரதையால் நடைபெற்ற விவசாயிகளின் உயிர் இழப்புகளுக்கு நமது தமிழக அரசு அவர்களது குடும்பத்தார்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,

விவசாயிகளின் உயிரிழப்புகளுக்கு உண்டான நிவாரணத்தையும் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையையும் பெற்றுத் தர தமிழகத்தில் பஞ்சம் இல்லாத விவசாய சங்கங்கள் உரிய துறைகளுக்கு அழுத்தும் கொடுத்து உடனடியாக நிவர்த்தி செய்திட வேண்டும் எனவும் நமது தின செயல் தேசிய நாளிதழ் சார்பாக விவசாய சங்கங்களுக்கும் தமிழக அரசிற்கும் கோரிக்கை விடுத்து வருகின்றோம்.

தேனி மாவட்டத்தில் இது மாதிரியாக சில,பல துறைகள் அவ்வப்போது விழிப்புணர்வு மற்றும் கள ஆய்வுகளில் ஈடுபடுவதில் தொய்வை காட்டி வருகின்றது என்பதை தேனி மாவட்ட ஆட்சியர்க்கு இத்தருணத்தில் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம்

Related Articles

Back to top button
Close
Close