fbpx
Others

செங்குன்றம்— மழை நீர் வடிகால் கால்வாய் பணி தொடங்கியது!

செங்குன்றம் பஜார் சாலையில் இரண்டு புறமும் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு 7 அடி ஆழம் 7அடி அகலத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 17 கோடியில் மழை நீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. திருவள்ளூர் கூட்டு சாலை சந்திப்பிலிருந்து பஜார் சாலை வழியாக காமராஜர் சிலை அருகே புழலேரி உபரி நீர் செல்லும் கால்வாய் வரை இந்த வடிகால் கால்வாய் அமைக்கப்படுவதாக நெடுஞ்சாலை துறை அறிவித்தது .பல்வேறு கடைகள் வணிக வளாகங்கள் ஓட்டல்கள் பஜார் சாலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருக்கிறது அந்த கட்டிடங்கள் முறையாக அகற்றப்பட்டு உரிய முறையில் கால்வாய் பணியை நடத்த வேண்டும் என்று பொதுமக்களும் வியாபாரிகளும் கேட்டுக் கொண்டுள்ளனர். அரை மணி நேரம் மழை பெய்தாலும் பஸ் நிலையம் . காவல் நிலையம். நெல் விற்பனை நிலையம் இருக்கின்ற பகுதியில் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகிறது .இந்த கால்வாய் அமைப்பதால் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை தீரும் என்று பொதுமக்களும் வியாபாரிகளும் நம்புகின்றனர். பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close