fbpx
Others

பெண்கள் குறித்துசர்ச்சை — எச்.ராஜா மீதான வழக்கு ….

பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து: எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்புதனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் எச்.ராஜா மனு தாக்கல் செய்து இருந்தார்.பா.ஜனதா மூத்த தலைவர் எச்.ராஜா தனது சமூக வலைத்தளமான பக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிட்டதாக ஈரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு ஈரோடு கோர்ட்டில் இருந்து, சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், எச்.ராஜா மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை ஐகோர்ட்டு, எச்.ராஜா மீதான வழக்கை 3  மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க சிறப்பு கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் எச்.ராஜா மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டது எச்.ராஜாதானா?என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எச்.ராஜா தரப்பில் ஆம் என்று பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்துவழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி, சிறப்பு கோர்ட்டில் நடைபெறும் விசாரணையை எதிர்க்கொள்ளும்படி உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்துஉத்தரவிட்டார்.

Related Articles

Back to top button
Close
Close