fbpx
ChennaiRETamil NewsTrending Nowஅரசியல்தமிழ்நாடு

புதியதாக 2,000 தற்காலிக நர்ஸ்கள் நியமனம்; முதல்வர் ஆணை!

சென்னை:

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடவுள்ள 81 நடமாடும் மருத்துவ குழுக்களை தொடங்கி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் செவிலியர்களுக்கான பணி நியமன ஆணைகளையும் அவர்களுக்கு  வழங்கினார்.

சென்னை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 173 நடமாடும் மருத்துவ வாகனங்கள் கடந்த சில தினங்களாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூடுதலாக சென்னை மாநகராட்சியில் 61 நடமாடும் விரைவு மருத்துவ குழுக்கள்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் 10 குழுக்கள்,

திருவள்ளுர் மாவட்டத்தில் 5 குழுக்கள்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 குழுக்கள் என மொத்தம் 81  நடமாடும்  விரைவு மருத்துவ குழுக்கள் என தமிழகத்தின்  பல மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு  கூடுதலாக பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

இந்த மருத்துவ குழுக்களை  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று காலை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் புதிதாக நியமிக்கப்பட்ட 2000 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டி அளித்தார்:

2000 ஆயிரம் செவிலியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இவர்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு உடனே பணியில் சேருவார்கள்.

சென்னையில் படுக்கை வசதிகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு  வருகிறது.

சென்னையில் 254 நடமாடும் மருத்துவ குழுக்கள் நேரடியாக களத்தில் சென்று பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரை 6 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகமான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசினார்.

Related Articles

Back to top button
Close
Close