fbpx
Others

2 நாட்களில் காயல்பட்டினத்தில் 110 செ.மீ, திருச்செந்தூரில் 90 செ.மீ மழைப்பொழிவு.

 மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் நேற்றும் விடிய விடிய அதிகனமழை கொட்டித் தீர்த்தது. பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 48 மணி நேரத்தில் தூத்துக்குடி காயல்பட்டினத்தில் 110 செ.மீ மழையும், திருச்செந்தூரில் 90 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது. திருச்செந்தூரில் நேற்று 23 செ.மீ., காயல்பட்டினத்தில் 21 செ.மீ., மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குலசேகரப்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 18 செ.மீ., மழை பெய்துள்ளது. நெல்லை மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 19 செ.மீ., மழை பெய்துள்ளது. காக்காச்சியில் 18 செ.மீ.,மாஞ்சோலையில் 17செ.மீ.,ஊத்துபகுதியில்15செ.மீ.,மூலைக்கரைப்பட்டியில்12செ.மீ.,அம்பாசமுத்திரம் 11 செ.மீ., பாபநாசத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது. ஸ்ரீவைகுண்டம்-17.4செ.மீ. , சாத்தான்குளம் 15.0 செ.மீ. , தூத்துக்குடி 13.7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close