fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

“கோடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை”-எடப்பாடி பழனிசாமி பேட்டி!

“கோடநாடு சம்பவத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை”. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் தொடா்பாக வெளியான வீடியோ முற்றிலும் உண்மைக்கு புரம்பானது என்று விளக்கம் அளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளை மட்டுமல்ல பல கொலை சம்பவங்களும் அரங்கேறியுள்ளதாகவும் அதற்க்கு பின்னணி யார் என்பதையும் தனியார் பத்திரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

ஜெயலலிதா இறந்த பிறகும், அதற்கு முன்பும் கோடநாடு எஸ்டேட்டில் பல கொள்ளை – கொலை முயற்சிகள் நடந்தன. பல மரணங்கள் மூடி மறைக்கப்பட்டன. கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி காவலாளி ஓம்பிரகாஷ் பகதூர் கொலை செய்யப்பட்டார். இதில் மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூருக்கு படுகாயம் ஏற்பட்டது. மேலும் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 5 கைக்கடிகாரங்கள், பளிங்கு கற்களால் ஆன அழகுசாதன பொருட்கள் ஆகியவற்றை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. எனவே இதுகுறித்து கோத்தகிரி போலீஸ் வழக்கு பதிவு செய்தது.

போலீசார் விசாரணை நடத்தியதில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் குற்றவாளி என கூறப்பட்ட நிலையில், சேலம் அருகே ஆத்தூரில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக இறந்தார். மற்றொரு குற்றவாளியான கனகராஜின் கூட்டாளி சயன், அவரது மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோருடன் காரில் கேரளாவுக்கு தப்பிச் சென்ற போது பாலக்காடு அருகே லாரி மோதி விபத்தில் சிக்கினார். இதில் வினுப்பிரியா, நீது ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த சயன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கொல்ல பல முயற்சிகள் நடந்த நிலையில், அவர் கேரளா தப்பிச் சென்றார். கோடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார் தற்கொலை செய்து கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் சயன் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக வெளிப்படையாக கூறியுள்ளார். இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நேரடியாக எங்களை எதிர்கொள்ள திராணி இல்லாதவர்கள் தவறான தகவலை பரப்புகின்றனர். கோடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக வெளியான வீடியோ ஆதாரத்தில் கூறப்பட்டவை உண்மையில்லை. தவறான செய்தி வெளியிட்டவர்கள், அதன் பின்புலத்தில் இருப்பவர்கள் விரைவில் கண்டறியப்படுவர்.

குறுக்கு வழியை கையாண்டு அ.தி.மு.க அரசை யாராலும் கவிழ்க்க முடியாது. கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கோடநாடு கொள்ளை குறித்த வீடியோ தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முழுமையாக விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும்.

Related Articles

Back to top button
Close
Close