fbpx
Others

14 மாவட்டங்களில் 6 ம் தேதி வரைகனமழை நீடிக்கும்…?

6ம் தேதி வரை மழை நீடிக்கும் 14 மாவட்டங்களில் இன்று கனமழை: சென்னை வானிலை மையம் அறிவிப்புசென்னை:  தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டு இருந்த வளி மண்டல கீழடுக்கு காற்று சுழற்சி, வடமேற்கு திசையில் நேற்று மாலையில் தென் மாவட்டங்கள் நோக்கி திரும்பியுள்ளது. இதனால் 14 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும். மேலும், வங்கக் கடலில்  6ம் தேதி உருவாகும் காற்று சுழற்சியால்  தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இலங்கை முதல் வடதமிழகம் வரை நீடித்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடலோரப் பகுதியில் இருந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் தரைப் பகுதிக்குள் நேற்று முன்தினம் மாலை நகரத் தொடங்கியது. அதனால், டெல்டா மாவட்டம் முதல் வடதமிழகம் வரை நேற்று முன்தினம் மாலையில் தொடங்கி  நேற்று மாலை வரை மழை பெய்தது.தொடர்ச்சியாக மழை பொழிவு காரணமாக  சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று  விடுமுறை அளித்து கலெக்டர்கள் உத்தரவிட்டனர். இதேபோல், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், தஞ்சை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்துக்கு மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டது. அதற்கேற்ப நேற்று மதியத்துக்கு பிறகு மேற்கண்ட மாவட்டங்களில் மழை பெய்தது. இதற்கிடையே, வங்கக் கடலில் தமிழக கடலோரப் பகுதியையொட்டி நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி நேற்று காலையில்  வடமேற்கு திசையில் நகர்ந்து திருச்சி- பெங்களூரு-ஐதராபாத்-குண்டூர்-ஓங்கோல் வரை சுமார் 3 லட்சத்து 42  ஆயிரம் கிமீ பரப்பளவில் நிலை கொண்டது.  மேலும் இந்த வளி மண்டல காற்று சுழற்சியில் அதிகளவில் ஈரப்பதம் உள்ளதால் மிக கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  குறிப்பாக சென்னையில் சூழ்ந்துள்ள மேகத்தின் ஈரப்பதம் 90%, காஞ்சிபுரம் 97%, வேலூர் 98%, திருவண்ணாமலை 96%, பெங்களூரு 92%, குண்டூர் 97%, ஈரப்பதம் உள்ளதால் அந்த இடங்களில் அதிக அளவில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. நேற்று காலை 11 மணிவரை வடதமிழகத்தில் பெய்த மழை  நேற்று மதியம் 3 மணிக்குமேல் பெங்களூர்-திருப்பதி-சென்னை-புதுச்சேரி-நாகப்பட்டினம்-தஞ்சாவூர்- மதுரை-திருச்சி பகுதிகளில் மிக கனமழையாக பெய்தது.பின்னர் நேற்று  மாலை 7 மணி அளவில் மீண்டும் அந்த காற்று சுழற்சி தென்கிழக்கு திசையில் நகர்ந்து மதுரை-ராமநாதபுரம்-கோவை-சேலம்-புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்குள் நுழைந்ததால் அந்த பகுதியில் மழை கொட்டியது. பின்னர்  நள்ளிரவு 2 மணி அளவில் மேலும் தென்கிழக்கு திசையில் நகர்ந்து கடல் நோக்கி பயணித்தது.  அப்போது நாகப்பட்டினம், சென்னை, மதுரையில் மிக கனமழை பெய்தது. இன்று காலை சென்னையில் பலத்த மழை பெய்யும். மேற்கண்ட இந்த நகர்வுகளால்  அதிகபட்சமாக 20 செமீ வரை மழை பெய்துள்ளது. இது தவிர சென்னை பெரம்பூர், துறைமுகம், ஆவடி 170 மிமீ, பொன்னேரி 160மிமீ, செங்குன்றம், கும்மிடிப்பூண்டி 140மிமீ, சோழிங்கநல்லூர், செய்யூர், எம்ஜிஆர் நகர், அம்பத்தூர், நுங்கம்பாக்கம், அயனாவரம், வில்லிவாக்கம் 130மிமீ,  அண்ணா பல்கலைக் கழகம் 120மிமீ, திருப்போரூர், டிஜிபி அலுவலகம், வில்லிபுத்தூர் 110மிமீ, சென்னை விமான நிலையம் 100 மிமீ மழை பெய்துள்ளது.இதையடுத்து, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று  கனமழை பெய்யும். வளிமண்டல சுழற்சி தொடர்ந்து நீடிப்பதால் வருகிற 6ம் தேதி தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.*வடகிழக்கு பருவமழையில் புயல்கள் வருமா?வடகிழக்கு பருவமழை காலத்தில் நவம்பர் 10ம் தேதி தொடங்கி 2023 ஜனவரி 20ம் தேதிவரை மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில்  பெரும்பாலும் காற்றழுத்தங்கள், காற்றழுத் தாழ்வு மண்டலம், அதிதீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்புள்ளது. புயல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.அதன்படி, 10ம் தேதி வங்கக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னை- தெற்கு ஆந்திரா இடையே கரையைக் கடக்கும். நவம்பர் 15ம் தேதி உருவாகும் காற்றழுத்தம் தமிழகத்தின்  மையப் பகுதி நோக்கி நகர்ந்து வரும். அப்போது ஒட்டுமொத்த தமிழகத்திலும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை மழை பெய்யும். குறிப்பாக இயல்பைவிட அதிக அளவில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. நவம்பர் 4வது வாரத்தில் ஒரு காற்றழுத்தம் உருவாகி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். அதன் காரணமாக 27ம் தேதி வரை மழை பெய்யும். நவம்பர் 28, 29, 30ம் தேதிகளிலும் ஒரு நிகழ்வு உருவாகும். டிசம்பர் 20ம் தேதி வரை மழை பெய்யும்.  டிசம்பர் 25ம் தேதியில் மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாகி சிறிய புயலாக மாறும் வாய்ப்புள்ளது.இந்த புயல் கடல் பகுதியில் உருவாகும் நீராவியை மட்டும் கொண்டு வந்து மழையாக பெய்யும். டிசம்பர் இறுதியில்  மன்னார் வளைகுடா பகுதியில்  ஒரு காற்றழுத்தம் உருவாகி டெல்டா பகுதியில் அதிக மழையை கொடுக்கும். பின்னர் ஜனவரி 1,2,3ம் தேதிகளிலும் ஜனவரி 3வது வாரத்திலும்  ஒரு காற்றழுத்தம் உருவாகி தென் மாவட்டங்களில் மழை பெய்யும். இவை எல்லாமே சாதாரணமான நிகழ்வுகளாக இருந்தாலும் அதிக அளவில் மழையை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close