fbpx
Others

துணைஆணையர்–ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்தொடங்கிவைத்தார்.

செங்குன்றம் போக்குவரத்து காவல் போலீசார் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்.ஆவடி மாநகர போக்குவரத்து துணை ஆணையர்ஜெயலட்சுமிதொடங்கிவைத்தார்.ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வாகன ஓட்டிகளுக்கும் பொது மக்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செங்குன்றம் போக்குவரத்து காவல் போலீசாரால் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.செங்குன்றம் நேதாஜி சிலையிலிருந்து ஹெல்மெட் அணிந்த போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செங்குன்றம் பஜார் ரோடு .காவாங்கரை. புழல். சூரப்பட்டு. ஒரகடம். அம்பத்தூர் எஸ்டேட் . பாடி மேம்பாலம் வரை 20 கிலோ மீட்டர் இருசக்கர வாகன ஊர்வலத்தை நடத்தினர்.
இந்த ஊர்வலத்தை ஆவடி மாநகர போக்குவரத்து துணை ஆணையர். ஜெயலட்சுமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். செங்குன்றம் போக்குவரத்து காவல் உதவி ஆணையர் மலைச்சாமி ஆய்வாளர் ராஜேஷ். உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் போக்குவரத்து போலீசார் சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இந்த ஊர்வலத்தில் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும். இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டக்கூடாது.,.அதி வேகமாக செல்லக்கூடாது. சாலை பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் ஆகிய வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு துணைஆணையர் ஜெயலட்சுமி வழங்கினார்..

Related Articles

Back to top button
Close
Close