fbpx
Others

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி உயிரிழந்த போது பாஜகவினர்……?

, கோவையில் சட்டம் ஒழுங்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைந்த இந்த கூட்டத்தில் கலெக்டர் சமீரன், மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தளபதி உயிரிழந்த போது பாஜகவினர் என்ன செய்தனர்? - அமைச்சர் செந்தில்பாலாஜி கோவை சம்பவத்துக்காக போராட்டம் நடத்தும் பாஜக, மக்கள் பிரச்சினைக்காக ஏன் போராடவில்லை. முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த போது, பாஜகவினர் என்ன செய்தனர். கோவை சம்பவம் தொடர்பான விசாரணையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்காணித்து வந்தார். சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்குள் காரின் உரிமையாளர் குறித்த தகவல்கள் கண்டறியப்பட்டது. கோவையில் இயல்பு நிலையில் பொதுமக்கள் தீபாவளியை கொண்டாடினர். முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும். விசாரணை அறிக்கை வெளிவரும் முன்பே, சம்பவம் குறித்த தகவல்கள் அண்ணாமலைக்கு எப்படி தெரியும். அண்ணாமலைக்கு தகவல்களை கொடுத்தது யார் என என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டும். அரசியல் உள்நோக்கத்துடன் சிலர் இச்சம்பவத்தை பூதாகரமாக பார்க்கின்றனர், அதற்கு ஊடகங்கள் இடம் தரக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்..

Related Articles

Back to top button
Close
Close