ஸ்ரீ நாராயண குரு பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக தீர்மானங்கள் நிறைவேற்றம்.
கோவை., மே. 27 :
ஸ்ரீ நாராயண குரு தமிழக பேரவையின், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவையில் உள்ள கேரளா கிளப்பில் நடைபெற்றது. இதில் நாராயண குரு ஜெயந்திக்கு தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும். தமிழகத்தில் நாராயண குருவிற்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும். போன்ற தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது. மேலும் ஐந்தாவது மாநில மாநாடு திருப்பூர் மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ நாராயண குரு தமிழக பேரவையின் கௌரவ ஆலோசகர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாந்தப்பன், அஜித்குமார், செந்தாமரை, விஸ்வநாதன், சேர்மன் டாக்டர். ரவீந்திரன், பொதுச்செயலாளர் சுதீஸ், பொருளாளர் பைங்கிளி சாஜில், இளைஞர் அணி செயலாளர்கள் அபிலாஷ், ராஜேஷ்,சுசி, மகளிர் அணி சரிதா, விஜயலட்சுமி, பிரிதீப் மற்றும் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், நீலகிரி, கன்னியாகுமரி, சேலம், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்