fbpx
Others

ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்டம் செய்தி

ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்டம் சார்பில், சாய் சஹஸ்ரநாம ஹாரம், சாய் பிரேமாம்ருத சாரம் 1008 பஜனை பாடல்கள் நிகழ்ச்சி சிறப்பு தொகுப்பு ,கோவையில் கடந்த 28/12/2022 தொடங்கியது. டாடாபாத், மேற்கு பவர்ஹவுஸ் ரோடு, சத்யநாராயணா ஹாலில், வரும் 1ம் தேதி வரை பஜனை நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில், தினமும் காலை 5:00 மணி முதல் ஓம்காரம், சுப்ரபாதம், நகரசங்கீர்த்தனம், பிரசாந்தி கொடியேற்றம், வேதபாராயணம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன…காலை முதல் இரவு 7:00 மணி வரை, பகவான் குறித்த 1008 நாம சங்கீர்த்தனங்களை, பாடல்களாக கோவையில் உள்ள 25 சமிதி அன்பர்கள் பாடுகின்றனர். இந்த தொடர் பஜனையில், புட்டபர்த்தி, மும்பை, சென்னை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கேரளா பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும்,  சாய்கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் பாடுகின்றனர். நிகழ்ச்சி அரங்கில், ஸ்ரீ சத்ய சாய் கோவை விஜயம் குறித்த புகைப்படக் கண்காட்சி இடம்பெற்றுள்ளது.சாய் ஆன்மிக கல்விப் பிரிவு சார்பில், பள்ளி மாணவ, மாணவியரின் சத்ய சாய் குறித்த படைப்புகள். காட்சிக்குவைக்கப்பட்டுள்ளன.முதல்நாள் பஜனையில், கோவை மாவட்ட பஜனைக் குழு, அர்ச்சனா குழுவினர், சாக்கியம் குழுவினர். திருப்பூர் மாவட்ட பஜனைக் குழுவினர், ஸ்ரவணம் குழுவினர், பாத சேவானம் குழுவினர் உள்ளிட்ட…
பக்தர்கள், 1008 நாம சங்கீர்த்தனத்தில் 1 முதல் 204 பாடல்களைப் பாடினர்.இரண்டாம் நாள்205 முதல் 411 வரையிலான பாடல்கள் கீர்த்தனம் குழு,சேலம் பஜன் குழு,பாத செவனம் குழு,யுவமிர்தம் குழு, சாக்கியம் குழுவினர் பாடினர். மூன்றாவது நாள்  412 முதல் 616 வரையிலான பாடல்கள் ஸ்ரவணம் குழு,வந்தனம் குழு, ஆத்மநிவேதனம் குழு, பிரசாந்திநிலையம் குழுவினர் பாடினர்.நான்காம் நாள்  617 முதல் 820 வரையிலான பாடல்கள் அர்ச்சனம் குழு, விஷ்ணு ஸ்மரணம் குழு, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, தாசயம் குழு, ராம் மற்றும் லக்ஷ்மன் சகோதரர்கள் குழுவினர் பாடினர்.  ஐந்தாவது நாள்
821 முதல் 1008 வரையிலான பாடல்கள் குழு,வந்தனம் குழு, ஆத்மநிவேதனம் குழு, பிரசாந்திநிலையம், கேரள பஜன் குழுவினர் பாடினர். இது நிகழ்ச்சி தவிர ஏழை மக்களுக்கு தினமும் 100 பாக்கெட் உணவு விநியோகம் செய்யப்பட்டது.
ஒரு நாளைக்கு 500 க்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.மேலும் இறுதி நாளில் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் மாநிலத் தலைவர் விழாவிற்கு வருகை தந்தார். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கோவை மாவட்ட ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் கோவை மாவட்ட சாய்பக்தர்கள் மற்றும் மாவட்ட தலைவர், மாவட்ட சேவை ஒருங்கிணைப்பாளர், மாவட்ட பஜன் ஒருங்கிணைப்பாளர், மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடுகளை செய்தனர். இந்நிகழ்ச்சியானது உலக அளவில் இரண்டாம் முறையாக தமிழ்நாட்டில், கோவை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
Close
Close