fbpx
Others

வ.உ.சி. பேத்தி மரகதம் மீனாட்சி தி.மு.க.வுக்கு கண்டனம்……

Latest Tamil News வ.உ.சி. பெயர் வடமாநிலத்தில் இல்லை என சிவா வருத்தப்பட்டுள்ளார். தமிழகத்தில் தி.மு.க. அதிகாரத்தில் உள்ளது. எத்தனை பல்கலை, நுாலகத்துக்கு வ.உ.சி. பெயரை தி.மு.க.வினர் வைத்துள்ளனர்?பார்லிமென்ட் வளாகத்தில், சிலை வைக்க வாய்ப்பு கிடைத்த போது, வ.உ.சி.க்கு சிலை வைக்கவில்லை. முரசொலி மாறனுக்கு சிலை வைத்தனர். முரசொலி மாறன் தியாகம் செய்து, சிறைக்கு சென்று சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா?தந்திரத்துக்காக போராடியவர்கள் பெயர்கள் தெரியாமல் போனதற்கு, காந்தி, நேருவின் கூட்டுச்சதி காரணமாகும். சுதந்திரத்தையே அவர்கள் இருவரும் தான் வாங்கி கொடுத்தது போல, எல்லா இடங்களிலும் அவர்களின் பெயரே இருக்கிறது. தென் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால், வ.உ.சி. பெயர் வைக்கவில்லை என்பது தவறு; காந்திக்கு ஜால்ரா தட்டாததே உண்மையான காரணம்.இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தி.மு.க.வினர், வ.உ.சி.க்கு எவ்வளவோ செய்திருக்கலாம். வ.உ.சி. எழுதிய, ‘மெய்யறத்தை’ பாடமாக வைக்க வேண்டுமென 10 ஆண்டுகளாக கேட்கிறேன். அது, ஒரே ஒரு வரி ஆத்திச்சூடி போன்றது.அவர்கள்ஏறெடுத்தாவது பார்த்தார்களா?வ.உ.சிதம்பரம் பிள்ளை என்ற பெயரை, வ.உ.சிதம்பரனார் என சுருக்கியதில் மட்டும் தான் இவர்கள் கவனம் உள்ளது. பிரதமர் மோடி, வந்தே மாதரம் பற்றி பேசும் போது, வ.உ.சிதம்பரம் பிள்ளை கப்பல் ஓட்டினார் என பெருமையாக குறிப்பிட்டு பேசுகிறார். இதை விட என்ன பெருமை வேண்டும்.காங். – தி.மு.க.வும், வ.உ.சி. உள்ளிட்ட பல தலைவர்களையும் முடக்குவதில் மிகவும் அக்கறையோடு செயல்பட்டனர். இப்போது வேஷம் போட்டு கொண்டு இருக்கின்றனர். இதற்கு எனது கண்டனத்தை தெரிவிக்கிறேன். இவ்வாறு வ.உ.சி. பேத்தி தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close