fbpx
Others

வைப்பு நிதி உங்கள் அருகில்’ குறைதீர்ப்பு முகாம்..

Know About EPFO: History, Structure, Work and Benefits | Khan Global  Studies Blogs

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல அலுவலகம் (இபிஎஃப்ஓ) சார்பில், ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ (நிதி ஆப்கே நிகட் 2.0) என்ற குறைதீர்ப்பு முகாம் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் இன்று(மார்ச்27)நடைபெறுகிறது.இதில், முதலாளிகள், ஒப்பந்ததாரர்களுக்கான ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகளை விளக்குதல், தொழிலாளர்களுக்கான ஆன்லைன் சேவைகள் விளக்குதல், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடனான கலந்துரையாடல், புதிய முயற்சிகள், சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.மேலும், உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்திசெய்தல்,ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பித்தல், இ-நாமினேஷன் தாக்கல் செய்தல் மற்றும் ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்டவைமேலும், உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளிகளிடம் இருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், ஓய்வூதியதாரர்களுக்கு மின்னணு வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பித்தல், இ-நாமினேஷன் தாக்கல் செய்தல் மற்றும் ஒப்பந்ததாரர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும்.இந்த முகாம் சென்னை மாவட்டத்தில், ஆஷா நிவாஸ் சமூக சேவை மையம், எண்.9, ரட்லேண்ட் கேட் 5-வது தெரு, ஸ்ரீராம்புரம், ஆயிரம் விளக்கு மேற்கு, பூம்புகார் நகர், சென்னை-6 என்ற முகவரியிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், டிக்னிட்டி இன்னோவேஷன்ஸ், எண்.359, 3-வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை, பட்டரைவாக்கம், சென்னை-98 என்ற முகவரியிலும்நடைபெறும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்டிமேட் ஃபேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், எண்.517-519, திருப்போரூர், கோட்டமேடு நெடுஞ்சாலை, நந்திவரம் கிராமம், கூடுவாஞ்சேரி-603 202 என்ற முகவரியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில், குருஷேத்ரா பப்ளிக் பள்ளி, விஜிஎம் நகர், கோனேரிக்குப்பம் கிராமம், சண்முகா நகர், வையாவூர் சாலை, காஞ்சிபுரம்-631 501என்ற முகவரியிலும் நடைபெறும். வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 எம்.எச்.வார்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Related Articles

Back to top button
Close
Close