fbpx
Others

வேளச்​சேரி-பரங்​கிமலை மின்​சார ரயில் சேவை இன்​று​முதல் இயக்​கம்…

மார்ச் 15 முதல் வேளச்சேரி-பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை தொடங்கும்: ரயில்வே  அறிவிப்புகடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் தடத்தை (மேம்​பால ரயில்) பரங்​கிமலை வரை 5 கி.மீ.தொலை​வுக்கு நீட்டிக்​கும் பணி 17 ஆண்​டு​களுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்​பர் மாதம் நிறைவடைந்​தது. இத்​தடத்​தில் ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர் ஜனக் குமார் கர்க் மார்ச் 5-ம் தேதி ஆய்வு செய்தார்​ . ஏசி மின்​சார ரயில் மூல​மாக அதிவேக சோதனை ஓட்​டம் நடத்​தப்பட்​டது. இச்​சோதனை ஓட்​டம் வெற்​றிகர​மாக முடிந்​த​தாக ரயில்வே அதி​காரி​கள் தெரி​வித்​திருந்​தனர். எனவே, மார்ச் 10 முதல் திட்டமிட்​டபடி, மின்​சார ரயில் சேவை தொடங்​கும் என்று எதிர்​பார்க்​கப்பட்​டது.ஆனால், தொழில்​நுட்ப ரீதி​யாக சில பணி​களை முடிக்க ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர் தெரி​வித்​திருந்​த​தால், ரயில் சேவை தொடங்​கு​வது தள்​ளி வைக்​கப்​பட்​டது.இந்​நிலை​யில் இந்த வழித்​தடத்​தில் புறநகர் ரயில் இயக்குவதற்​கான தற்​காலிக பாது​காப்பு சான்​றிதழை ரயில்வே பாது​காப்பு தலைமை ஆணை​யர் வழங்​கி​யுள்ளார்​..இதையடுத்து இன்​று​முதல் வேளச்​சேரி – பரங்​கிமலை வழித்தடத்​தில் ரயில்​கள் இயக்​கப்​படும் என தெற்கு ரயில்வே அறி​வித்​துள்​ளது. சென்னை கடற்​கரை- வேளச்​சேரி இடையே தற்​போது 86 ரயில் சேவை​கள் உள்ள நிலையில் இவை பரங்​கிமலை வரை நீட்​டிக்​கப்​பட்​டு, கடற்​கரை – பரங்கிமலை இடையே 86 ரயில் சேவைகள் இயக்​கப்​பட​வுள்​ளன.மேலும் கடற்​கரை, பரங்​கிமலை​யி​லிருந்து முதல் ரயில் காலை 5 மணிக்​கும், கடைசி ரயில் 10.20 மணிக்​கும் இயக்​கப்​படும். ஆதம்​பாக்​கத்​தில் நிற்​காது வேளச்​சேரி-பரங்​கிமலை இடையே புழு​தி​வாக்​கம், ஆதம்பாக்​கம் ரயில் நிலை​யங்​கள் இருக்​கும் நிலை​யில் ஆதம்​பாக்​கம் ரயில் நிலை​யத்​தில் சில பணிகள் காரண​மாக ஒரு வாரத்​துக்கு ரயில்​கள் நிற்​காது என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.ரயில் சேவை தொடங்​கப்​பட்​டுள்​ளதற்கு உள்​ளகரம் – புழுதிவாக்​கம் குடி​யிருப்​போர் நலச் சங்​கங்​களின் கூட்​டமைப்​பு தலை​வர் என்.பாபு, துணைத் தலை​வர் வேணு​கோ​பால், இணை பொதுச்செய​லா​ளர் கண்​ணன் ஆகியோர் தெற்கு ரயில்வே உதவி துணை பொது​ மேலா​ளர் செழியனை சந்​தித்து நன்றி தெரி​வித்​தனர்.மேலும் ஆதம்​பாக்​கம், புழு​தி​வாக்​கம் ரயில் நிலை​யங்​களை தூய்​மை​யாக பராமரிக்க வேண்​டும்​ என்​றும்​ புழு​தி​வாக்​கம்​ ரயில்​ நிலை​யத்​தில்​ ​பார்​க்​கிங்​ வசதி ஏற்​படுத்​த வேண்​டும்​ என்றும்​ கோரிக்​கை மனு அளித்தனர்.

Related Articles

Back to top button
Close
Close