fbpx
Others

வேலூர்–இனிப்பு பாக்ஸ்*** பல லட்சம் கையாடல்..அதிர்ச்சி செய்தி..?

வேலூர் சிஎம்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் பேரவை கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்றி கூட்டத்தின் முடிவில் ஆவின் நிறுவனத்தில்இருந்துவாங்கப்பட்டஇனிப்புவகைகளைசங்கஉறுப்பினர்களுக்குவழங்குவதுநடைமுறைஅதேபோலசங்கஉறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இனிப்பு வகைகள் ஆவின் நிறுவனத்தில் இருந்து மட்டுமே பெறப்பட வேண்டும் என்பது கூட்டுறவு சங்கத்திற்கான அரசு ஆணை ஆனால்இந்த ஆண்டும் சங்க உறுப்பினர்கள் பேரவைகூட்டம் நடத்தி முடிவில் இனிப்புகள் வழங்கப்பட்டது, வழங்கியதில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாக சங்க உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர், கடந்தஆண்டுகளில் வழங்கப்பட்ட இனிப்பு வகைகள் ஆவின் நிறுவனத்திலிருந்து தரமுள்ள இனிப்பு வகைகள் பெறப்பட்டு வழங்கப்பட்டன, ஆனால் இந்த ஆண்டு தனியார் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட தரமற்ற இனிப்பு வகைகளை வாங்கி ஆவின் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டவை என்று உறுப்பினர்களை நம்பகத்தன்மையை பெற ஆஷா பில்டிங் ஆவின் பாலகத்தில் வைத்து அவ் ஊழியர்களின் மூலம் விநியோகிக்கப்பட்டுள்ளது, இதைப் பெற்றுக் கொண்ட உறுப்பினர்கள் ஒரு சிலர் சந்தேகம் அடைந்து இது ஆவின் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டதா அப்படி அந்நிறுவனத்தில் இருந்து பெறப்பட்டு இருந்தால் இனிப்பு பெட்டகத்தின் மேல் நிறுவனத்தின் பெயர் தயாரிக்கப்பட்ட நாள் காலாவதியாகும் குறித்த விவரம் காணப்படும், அவையாவும் காணப்படவில்லை என்று கூறி சங்க உறுப்பினர்கள்கேள்வி எழுப்பவே ஒரு சிலருக்கு கொடுத்து விட்டு மற்ற இனிப்பு பாக்ஸ்களை சங்க பணியாளர்கள் கொடுக்காமல் எடுத்துச் சென்று விட்டனர், இதனால் இந்த இனிப்பு பாக்ஸ் வாங்க ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன, இதில் பல லட்சம் கையாடல் நடந்துள்ளது, இதுகுறித்து மாவட்ட கூட்டுறவு கடன் சங்க பதிவாளர் சுரேஷ் குப்தா விரிவான விசாரணை நடத்தி முறைகேடுகளில் ஈடுபட்ட நிர்வாக அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close