fbpx
Others

வெற்றி துரைசாமியின் நிலை என்ன?

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியை தேடும் பணி 4-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கும் முன்பாக ஹோட்டல் ஒன்றில் இருந்து உணவு அருந்திவிட்டு வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னை மாநகராட்சி மேயராக இருந்தவர் சைதை துரைசாமி. இவருடைய மகன் வெற்றி ( வயது 45). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. தொழிலதிபரான வெற்றி துரைசாமி, தனது தந்தை சைதை துரைசாமி நடத்தி வரும் மனிதநேய ஐஏஎஸ் பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார். சினிமா படங்களையும் வெற்றி துரைசாமி இயக்கி வருகிறார்.  இந்த நிலையில், கடந்த 4 ஆம் தேதி சிம்லா, லடாக் பகுதிகளுக்கு தனது உதவியாளர் கோபிநாத்துடன் வெற்றி துரைசாமி சுற்றுலா சென்று இருந்தார். இருவரும் 4ஆம் தேதி பிற்பகல் சிம்லா நோக்கி இன்னோவா காரில் சென்று கொண்டிருந்தனர். இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த காரை என்பவர் ஓட்டினார். அப்போது, கார் ஓட்டுநர் தன்ஜினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி.. அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.4 வது நாளாக தேடும் பணி: தகவலறிந்த போலீஸார், தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் சென்றனர். அங்கு காரை மீட்ட போது அதில் தன்ஜின் உயிரிழந்திருந்தார். அது போல் அங்கிருந்த கற்கள் மீது விழுந்த கோபிநாத் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். சட்லஜ் ஆற்றில் மாயமான வெற்றியை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சைதை துரைசாமியும் இமாசல பிரதேசம் சென்றுள்ளார். மாயமான தனது மகன் குறித்து தகவல் கொடுத்தால் ரூ 1 கோடி வழங்குவதாக சைதை துரைசாமி தெரிவித்துள்ளார். 4-வது நாளாக இமாச்சல பிரதேசம் சத்லெஜ் நதிக்கரையில் வெற்றி துரைசாமியை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இமாச்சல பிரதேச போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஐபோன் கண்டெடுக்கப்பட்டது. அதேபோல் பாறைகளுக்கு இடையே மூளை பாகம் ஒன்று கிடந்தது. இதை டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  தொடர்ந்து வெற்றி துரைசாமியை தேடு பணி நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று இமாச்சல பிரதேச போலீசார் கூறியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அணை ஒன்று உள்ளது. அந்த பகுதி வரை தேடுதல் பணி நடத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெற்றி துரைசாமியின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளூர்வாசிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இமாச்சல பிரதேச போலீசார் கூறியுள்ளனர். ஸ்கூபா நீச்சல் வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, விபத்தில் சிக்கும் முன்பாக வெற்றி துரைசாமி உணவகம் ஒன்றிற்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. உணவகத்தில் இருந்து விபத்து எற்பட்ட இனோவா காரில் தனது உதவியாளருடன் வெற்றி துரைசாமி ஏறிச்செல்லும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close