fbpx
Others

புதுச்சேரி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 19-ந்தேதி முதல் ஆய்வு..

காரைக்கால் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஆய்வு செய்வது குறித்து அரசியல் கட்சியினருடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 19-ந்தேதி முதல் ஆய்வு நாடாளுமன்ற தேர்தல்வருகிற 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் சோதனைக் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் காரைக்கால் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் குலோத்துங்கன் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். வாக்காளர் பதிவு அதிகாரிகள் ஜான்சன், சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கூட்டத்தில், வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பாட் எந்திரங்கள் ஆகியவற்றை வருகிற 19-ந் தேதி முதல் 29-ந்தேதி வரை, காரைக்கால் மாவட்டத்தில் முதற்கட்ட ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் முதற்கட்ட சோதனை எப்படி நடைபெறும் என்பதை அரசியல் கட்சி தலைவர்களுக்கு விளக்கி கூறப்பட்டது.  அப்போது கலெக்டர் குலோத்துங்கன் பேசுகையில், ”இந்த ஆய்வின் போது, ஒவ்வொரு அரசியல் கட்சியிலும் 2 பேர் அனுமதிக்கப்படுவார்கள். அப்போது செல்போன், கேமரா உள்ளிட்டவை அனுமதிக்கப்படாது. காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை தினமும் இந்த ஆய்வு நடைபெறும்” என்றார்.

Related Articles

Back to top button
Close
Close