
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில் அதை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது மக்கள் வீட்டில் இருந்தபடியே புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அடுத்த மாதம் 3-ஆம் தேதிவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. அனைத்து மத வழிபாட்டு தலங்களும் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்கள் கோவிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது ஊரடங்கு தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் , மக்கள் வீட்டில் இருந்தபடியே தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.