fbpx
Others

விவசாயி சின்னத்தை பறிகொடுக்கும் நா.த.க.? அடுத்து என்ன செய்யப்போகிறது நாம் தமிழர் கட்சி?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்து பரப்புரை செய்து வரும் நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பார்க்கலாம்.நாம் தமிழர் கட்சிக்கு வந்த சிக்கல்!ஆம், கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா எனும் கட்சி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட கரும்பு சின்னத்தை தேர்தல் ஆணையத்திடம் இருந்து கேட்டு பெற்றுள்ளது. மேலும், டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா உட்பட 11 மாநிலங்களில் அந்த கட்சி போட்டியிடப்போவதாகவும், இதனால் விவசாய சின்னத்தில் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனால், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.பொதுவாக ஒரு கட்சி தொடங்கி எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அந்த கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே அதற்கான தனிச்சின்னம் என்பது ஒதுக்கப்படும். அப்படிமாநில கட்சி ஒன்று தேர்தல் அங்கீகாரத்தை பெற வேண்டுமானால்,-மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றிப் பெற்றிருக்கவேண்டும்.அல்லது-அம்மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 1 நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்கவேண்டும்.அல்லது-மாநில சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும்.தமிழ்நாடு நிலவரம் என்ன?தமிழகத்தைப் பொருத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகள் இருக்கின்றன.இதில் 3 சதவீதம் என்றால், 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். அல்லது, நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 2 தொகுதிகளில் வெல்ல வெண்டும். அல்லது, மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் போன்ற நிபந்தனைகள் உள்ளன.இதில் ஏதாவது ஒன்றை பெற்றுவிட்டால், அந்த கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறும்.தகுதி பெற்ற பின்னும் நாம் தமிழர் கட்சிக்கு வந்த சிக்கல்…
அப்படிப்பார்த்தால், கடந்த 2016ம் ஆண்டில் இருந்து தேர்தல் களத்தில் பங்குபெற்று வரும் நாம் தமிழர் கட்சி, கடைசியாக 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், 6.72 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இதுவரை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை எனினும், 2016ம் ஆண்டு 1.1 ஆக இருந்த வாக்கு சதவீதம் தற்போது கிட்டத்தட்ட 7 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூடுதல் வாக்குகளை பெற அக்கட்சி தீவிரம் காட்டி வரும் நிலையில், கட்சிக்கு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.கரும்பு விவசாயி சின்னத்துக்கு போராடும் நா.த.க.!   2016 தேர்தலுக்குப் பிறகு, இதுவரை சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் கரும்பு விவசாயி சின்னத்திலேயே போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, இந்த முறையும் சின்னத்தை பெற தீவிரம் காட்டி வருகிறது. தற்போது கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், தேர்தல் ஆணையத்திற்கு சென்று சின்னத்தை பெற நாம் தமிழர் கட்சி முனைப்பு காட்டி வருகிறது. அங்கு முடியவில்லை என்றால், உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்து நீதி பெறுவோம் என்கின்றனர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள்.

Related Articles

Back to top button
Close
Close