fbpx
Others

விமானம் தாங்கி கப்பல் விக்ராந்த்—சிறப்பம்சம்…..!

விமானம் தாங்கி கப்பல் விக்ராந்த்

இந்த கப்பல் MIG-29K போர் விமானங்கள், Kamov-31, MH-60R மல்டி-ரோல் ஹெலிகாப்டர்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் (ALH) மற்றும் இலகுரக போர் விமானங்கள் (LCA) ஆகியவற்றை உள்ளடக்கிய 30 விமானங்களைக் கொண்ட விமானப் பிரிவை இயக்கும் திறன் கொண்டதாக இருக்கும். STOBAR எனும் குறைந்த இடத்தில் டேக் ஆப், தரையிறக்க தொழில்நுற்பம் கொண்டிருக்கும்.கப்பலுக்கான உள்நாட்டு உபகரணங்கள் BEL, BHEL, GRSE, Keltron, Kirloskar, Larsen & Toubro, Wartsila India போன்ற உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்டன..DRDO மற்றும் ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (SAIL) கூட்டாண்மை மூலம் கப்பலுக்கான எஃகு உள்நாட்டில் இருந்து பெறப்பட்டது.ஆகஸ்ட் 2021 மற்றும் ஜூலை 2022 க்கு இடையில் நடத்தப்பட்ட விரிவான பயனர் சோதனைகளைத் தொடர்ந்து விக்ராந்த் இந்திய கடற்படைக்கு CSL மூலம் வழங்கப்பட்டது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) இந்தியாவின் முக்கிய நிலையை மேம்படுத்தும் பணியில் இது ஒரு பெரிய மைல்கல்லாக விளங்கும்

Related Articles

Back to top button
Close
Close