fbpx
Others

விடுதலையானவர்களை சிறப்பு முகாமில் வதைப்பது கடும் கண்டனம் என சீமான்

, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை தொடர்ந்து நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தங்கள் வாழ்நாளை கழித்த அவர்களின் விடுதலையை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்றனர். இந்நிலையில், விடுதலையானவர்களில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன், முருகன் ஆகிய நான்கு பேர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 31 ஆண்டுகளுக்கும் மேலான கொடுஞ்சிறைவாசத்துக்குப் பிறகு, விடுவிக்கப்பட்ட தம்பி இராபர்ட் பயஸ், அண்ணன் ஜெயக்குமார், தம்பி சாந்தன், தம்பி முருகன் ஆகிய நால்வரையும் திருச்சி, சிறப்பு முகாமுக்கு அழைத்துச்சென்று 15 மணி நேரத்துக்கும் மேலாக அவர்களுக்கு எந்தவித அறையும் ஒதுக்கீடு செய்யாது, ஓய்வெடுக்கவும் விடாது விடிய விடிய நாற்காலியிலேயே அமர வைத்திருந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.  நீண்ட நெடுஞ்சிறை வாசத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட அவர்களை சிறப்பு முகாம் எனும் சித்திரவதைக்கூடத்தில் அடைக்காது மாற்றிடத்தில் தங்க அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி வரும் நிலையில், முதல் நாளே சிறப்பு முகாமில் வைத்து வதைப்பது கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close