Others
விஜய் ஆளுநர் மாளிகை வந்தார்…
தவெக தலைவர் விஜய் ஆளுநரை சந்தித்து பேசுவதற்காக சென்னை ராஜ் பவன் வந்தடைந்தார். 1 மணிக்கு அவர் ஆளுநரை நேரில் சந்தித்து உரையாடவிருக்கிறார். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவிவகாரத்தில், தான் அரணாக இருப்பேன் என்று பெண்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த விவகாரம்தொடர்பாகவேஅவர்ஆளுநரைசந்திக்கசென்றிருக்கிறார். ஆளுநர் RN ரவியுடனான தவெக தலைவர் விஜய்யின் சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.இந்தசந்திப்பின்போது, திமுக அரசு குறித்து மட்டுமே பேசப்படும் என யூகங்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன. ஆனால், அந்த பார்வையை விஜய் அளித்த மனு மாற்றியுள்ளது. அம்மனுவில், மாநில அரசு கேட்கும் ஃபெஞ்சல் நிவாரணத் தொகையை மத்திய அரசு முழுமையாக வழங்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.