fbpx
Others

விஜய்க்கு சிபிஐ அனுப்பிய சம்மனில்…..

Vijay CBI Karurகரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக தேர்தல் பிரச்சார கூட்ட நெரிசல் சம்பவம், தமிழக அரசியலில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒன்று. 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தது தமிழக அரசியலில் இதுவரை அரங்கேறாத ஒன்று.இந்த வழக்கை தமிழ்நாடு காவல்துறையில் எஸ்ஐடி விசாரித்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விசாரணை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன்படி, சிபிஐ தீவிரமாக விசாரணையை முன்னெடுத்துவருகிறது கடந்த ஜனவரி மாதம் 29, 30, 31 ஆகிய 3 நாட்களில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், கரூர் மா.செ. மதியழகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் டெல்லியில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் என மொத்தம் கரூர் சம்பவம் தொடர்பாக சுமார் 19.30 மணி நேரம் நீண்ட விசாரணையை சிபிஐ நடத்தியது.இந்த விசாரணைகள் முடிந்த பின்னர், வழக்கின் அடுத்த கட்டமாக தவெக தலைவர் நடிகர் விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக, 2026 ஜனவரி 6-ஆம் தேதி விஜய்க்கு எழுத்துப்பூர்வ சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மன் வெளியான உடனேயே, விஜய் விசாரணைக்கு நேரில் ஆஜராவாரா? அல்லது சிபிஐக்கு எதிராககோர்ட்டுக்குசெல்வராஎன்றகேள்விஅரசியல்வட்டாரங்களில்பரபரப்பாகபேசப்பட்டது.ஆனால்,எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நீதிமன்றத்தைநாடவில்லை.இதற்குக்காரணமாகசிபிஐஅனுப்பியசம்மனின்சட்டப்பிரிவுதான்முக்கியமானதாகபார்க்கப்படுகிறது. சிபிஐ, விஜய்க்கு BNSS 179 என்ற சட்டப்பிரிவின் கீழ் சம்மன் அனுப்பியுள்ளது. இந்தப் பிரிவு, ஒருவரை குற்றவாளியாக கருதி விசாரிப்பதற்கானது அல்ல. மாறாக, நடந்த குற்றம் தொடர்பாக தகவல்கள் தெரிந்திருக்கலாம், சம்பவத்தின் பின்னணி குறித்து விளக்கமளிக்கக் கூடியவர் என்ற அடிப்படையில், சாட்சியாக விசாரிக்கப்படும் நபர்களுக்கான பிரிவாகும் அதாவது, சட்ட ரீதியாக தற்போது விஜய் ஒரு குற்றவாளி அல்ல; அவர் ஒரு சாட்சியாக மட்டுமே அழைக்கப்பட்டுள்ளார். இதனால், விஜய்க்கு பிரச்சினையே இல்லையா? என்ற கேள்வி பொதுமக்களிடையே இயல்பாக எழும். ஆனால், உண்மையில் அப்படியில்லை. இதிலும் விஜய்க்கு ஒரு பிரச்சினை உள்ளது என்கிறார்கள் சட்ட நிபுணர்கள் அதற்கு தெளிவான பதிலை அளிக்கிறார்கள். சாட்சியாக விசாரிக்கப்படுவது பாதுகாப்பான நிலை போல தோன்றினாலும், விசாரணையின் போது வழங்கப்படும் தகவல்களில்முரண்பாடுஏற்பட்டால்,விஜய்மீதானகுற்றச்சாட்டுமாற்றப்படலாம்.சிபிஐவிசாரணக்குவிஜய்க்குஒத்துழைக்கவில்லை என்றாலோ? மாற்றி மாற்றி பேசினாலோ? அவர் சாட்சியிலிருந்து சந்தேகநபர் (Suspect) என்ற நிலைக்கு கொண்டு செல்லப்படலாம். அப்போது, அவரை குறுக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் சிபிஐ-க்கு கிடைக்கும். இதுவே விஜய்க்கு உள்ள முக்கியமான சிக்கலாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில்தான், விஜய் ஏன் நீதிமன்றத்தை நாடவில்லை என்ற கேள்விக்கு விடை கிடைக்கிறது.BNSS 179 பிரிவின் கீழ் அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து உடனடியாக நீதிமன்றம் செல்வது சட்ட ரீதியாக பொருத்தமல்ல என்று அவரது சட்ட ஆலோசகர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். மேலும், இந்த வழக்கை மாநில அரசிடம் இருந்து சிபிஐ அல்லது நீதித்துறை மேற்பார்வைக்கு மாற்ற வேண்டும் என்று முன்பே கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், தற்போது விசாரணைக்கு ஆஜராகாமல் நீதிமன்றத்தை நாடினால், அது விஜய்க்கு சாதகமாக இருக்காது என்பதும் வழக்கறிஞர்கள் குழுவின் ஒருமித்த கருத்தாக உள்ளது.அதனால், தற்போதைய சூழலில் விசாரணைக்குநேரில்ஆஜராகி,தன்தரப்புநியாயத்தைதெளிவாகபதிவுசெய்வதேசிறந்தமுடிவுஎனவிஜய்கருதுவதாகசொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில், வரும் 12-ஆம் தேதி காலை 11 மணிக்குசிபிஐவிசாரணைக்குவிஜய்ஆஜராகஉள்ளதாகதகவல்கள்வெளியாகியுள்ளன. இந்த விசாரணையின் போது விஜயின் ஒவ்வொரு வார்த்தையும், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வையும், விஜயின் எதிர்கால அரசியலையும் தீர்மானிக்கும் என்கின்றனர்.

Related Articles

Back to top button
Close
Close