fbpx
Others

விஜயதரணி – – காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்தார்.

 காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த விஜயதரணி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரசில் இருந்து விலகியதால் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் பதவி பறிபோகும் என்பதால் பதவியை ராஜினாமா செய்தார்.நேற்று மதியம் டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்திற்குச் சென்ற விஜயதரணி, பாஜவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர்கள் அரவிந்த் மேனன், சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் முன்னிலையில் அக்கட்சியில் விஜயதரணி இணைந்துள்ளார். அவருக்கு பாஜ முக்கிய நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.இதையடுத்து விஜயதரணி அளித்த பேட்டியில்; “காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி. பாஜகவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் கட்சியில் இணைந்துள்ளேன். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாக பாஜக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை நாட்டிற்கு மிக அவசியம். நடந்தவை நடந்ததாக இருக்கட்டும்” எனவிஜயதரணி கூறினார்.இந்நிலையில் இன்று காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.க.வில் சேர்ந்த விஜயதரணி, தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரசில் இருந்து விலகியதால் கட்சித் தாவல் தடைச்சட்டத்தின் கீழ் பதவி பறிபோகும் என்பதால் பதவியை ராஜினாமா செய்தார்

Related Articles

Back to top button
Close
Close