விஜயகாந்த்க்காக ஸ்டாலின்பாடலை பாடுவது போல் காட்சி…..?
1988 ஆம் ஆண்டு மக்கள் ஆணையிட்டால் என்ற திரைப்படத்தில் எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைத்த பாடலுக்குதான் ஸ்டாலின் வாயசைத்தார்.அந்த படத்தில் விஜயகாந்த் வேட்பாளராக களமிறங்குவார். அவருக்காக ஸ்டாலின் அந்த படத்தில் பாடலை பாடுவது போல் காட்சி இருந்தது. அந்த பாடலை முன்னாள் முதல்வர் கருணாநிதி எழுத, அதை மலேசியா வாசுதேவன் பாடியிருந்தார். அந்த பாடல் வரிகளை பார்க்கலாம். உங்கள் ஓட்டு கதிரவனுக்கு எங்கள் ஓட்டு கதிரவனுக்கு நாட்டு நடப்ப பாத்து போடுங்கம்மா ஓட்டு…. ஆண்: ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு ஆண்: ஏற எறங்க பாத்து எடைகள கொஞ்சம் போடு ஏற எறங்க பாத்து எடைகள போடு நீ எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகள போடு ஆண்: ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு ஆண் : ஓட்டுக்கு உன்னிடத்தில் வருபவன் யாரு உழைப்பவனா ஊரை ஏய்ப்பவனா தேர்தல் களத்தினிலே நிற்பவன் யாரு தியாகம் செஞ்சவனா மோசம் செஞ்சவனா ஆண் : ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கொழுத்தர்கள குழு : நம்பாதப்பா ஆண் : நாட்டுக்கு உயிர் கொடுக்கும் நல்லவர குழு : தள்ளாதப்பா ஆண் : லஞ்ச பேய்கள வெரட்டணுமே ஏழை துன்பம் தீர்ப்பவன் ஜெயிக்கணுமே அதுக்கு ஆண் : ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு….. பாரப்பா…. குழு : ஆண் : எண்ணெய் விலைய கேட்டு குழு : போடுங்கம்மா ஓட்டு ஆண் : அரிசி விலைய பார்த்து குழு : போடுங்கம்மா ஓட்டு ஆண் : இந்த படை குழு : போதுமா ஆண் : இன்னும் கொஞ்சம் குழு : வேணுமா ஆண் : கொள்கையே இல்லாத கொடியவன் யாரு கொடுமைக்கு பணியா வீரனும் யாரு ஊழல் புரிஞ்சு வாழும் மனுஷனும் யாரு அதை ஊருக்கு சொல்லும் உயர்ந்தவன் யாரு ஆண் : உறவுக்கு கரம் கொடுப்பான் உங்க வீட்டு குழு : தம்பியப்பா ஆண் : உரிமைக்கு குரல் கொடுப்பான் தென்பாண்டி குழு : சிங்கமப்பா ஆண் : உதயக் கதிரும்தான் உதிக்குது பாரு உடன் பிறப்பே நீ ஒன்றாக சேரு…ஆண் : ஹேய் ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு ஏற எறங்க பாத்து எடைகள போடு நீ எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகள போடு ஆண் : ஹான் ஆற அமர கொஞ்சம் யோசிச்சு பாரு நீ அடுத்து வரும் தலைமுறையை சிந்திச்சு பாரு