fbpx
Others

விசில் சின்னத்தை தக்கவைக்க தவெக விரும்புமா….?

விஜயின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு – Seithi Saralதவெகவுக்கு விசில் சின்னம் கிடைத்ததை அக்கட்சியினர் கொண்டாடி வரும் வேளையில், இந்திய தேர்தல் வரலாற்றில் விலைபோகாத சின்னமாகவே விசில் சின்னம் இருந்து வருவதாக தரவுகள்சொல்கின்றன. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் விஜய்யின் விசில் சத்தம் காதை கிழிக்குமா இல்லை டெபாசிட் இழந்து காத்து தான் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில் தவெகவினரின் விசில் சின்னம் கடந்து வந்த பாதை குறித்து குட்டி ரீவைண்ட் ஒன்றை காணலாம்.விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் சென்சார் போர்டு பிரச்னையால் இன்னும் வெளியாகாத நிலையில், தவெக தொண்டர்களும், விஜய் ரசிகர்களும் கொண்டாடும் வகையில்அவர்கள்கேட்ட`விசில்’சின்னத்தையேதேர்தல்ஆணையம்ஒதுக்கியிருக்கிறது.  .மேடைகளில், பிரசாரங்களில் எவ்வளவுதான் முழங்கினாலும் மக்கள் மனதில் சின்னத்தை பதியவைப்பது எளிதான காரியமல்ல. அந்த வகையில்,மக்களுக்கு மிகப் பரிட்சையமான சின்னமாகவிசில்சின்னம்இருப்பதால்தவெகவினர்கொண்டாட்டத்தில்இருக்கின்றனர்.கேட்டசின்னமேகிடைத்துதவெகவுக்குசாதகமானதாகப்பார்க்கப்படுகிறது.  அதேசமயம், விசில் சின்னம் இதற்கு முன்பு பிரபலநடிகர்கள்,அரசியல்வாதிகள்பலருக்கும்ஒதுக்கப்பட்டிருக்கிறது. சமகாலத்தில் வலதுசாரி அரசியலை குறிப்பாக ஆர்.எஸ்.எஸ், பாஜக-வை கடுமையாக எதிர்க்கும் நடிகர் பிரகாஷ்ராஜ், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு சென்ட்ரல் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டபோது அவருக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம்ஒதுக்கியது.ஆனால்,அந்தத்தேர்தலில்பிரகாஷ்ராஜ்28,906வாக்குகளுடன்தோல்வியடைந்தார்.  அதேபோல், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில்சென்னைவிருகம்பாக்கம்தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு! - Thentamil தொகுதியில்சுயேச்சையாகப்போட்டியிட்டமறைந்தநகைச்சுவைநடிகர்மயில்சாமிக்குவிசில்சின்னம்ஒதுக்கப்பட்டிருந்ததுஆனால்,அத்தேர்தலில்வெறும்1,440வாக்குகளுடன்படுதோல்வியடைந்தார் 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கத்துக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் தமிழருவி மணியன் தனது இயக்கத்தை ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸோடு இணைத்தார்என்பதுகுறிப்பிடத்தக்கது.இவைமட்டுமல்லாது, முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியும், செயற்பாட்டாளருமான ஜெயபிரகாஷ் நாராயணின் லோக் சத்தா கட்சி  2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஆந்திராவில் சில தொகுதிகளில் போட்டியிட்டபோது அவர்களுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை.அதேபோல், தெலங்கானாவில் 2023-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிட்ட தொகுதிகளில்  இந்தியபிரஜாகாங்கிரஸ்என்றசிறியகட்சிக்குவிசில்சின்னம்போட்டியிட்டஒதுக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்சியும் அத்தேர்தலில் தோல்வியையே சந்தித்தது.இவ்வாறு விசில் சின்னத்தில் போட்டியிட்டவர்கள் பெரும்பாலும் தோல்விகளைச் சந்தித்திருந்தாலும் மகாராஷ்டிராவில் பிரபலகட்சியாகஅறியப்படும்பகுஜன்விகாஸ்அங்காடிகட்சிவிசில்சின்னத்தில்குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு சீட், அதே ஆண்டில் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் 2 சீட்,2014சட்டமன்றத்தேர்தலில்3சீட்எனகுறிப்பிடத்தக்க வெற்றிகளை விசில் சின்னத்தில் பெற்றிருக்கிறது. இருப்பினும், கடைசியாகப் போட்டியிட்ட 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும்ஒருசீட்கூடவெல்லவில்லை.தேர்தல் வரலாற்றில் விசில் சின்னத்துக்குப் பின்னால் பெரிய வெற்றிகரமான சின்னம் என்ற பிம்பம் இல்லாததால், வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியை த.வெ.க பெறுமா என்ற எதிர்பார்ப்புகூடியிருக்கிறது.இதில்கவனிக்கவேண்டியாதுஎன்னவென்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் தவெக போட்டியிடாத தொகுதிகளில் விசில் சின்னம் வேறொருவருக்குஒதுக்கப்படும்என்றும்தேர்தல்ஆணையம்தெரிவித்திருக்கிறத்து.ஒரு  வேளை 234 தொகுதிகளிலும் தவெக போட்டியிட்டால் விசில் சின்னம் இவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும். மேலும், இந்தத் தேர்தலில் த.வெ.க குறைந்தபட்சம் 6 சதவிகித வாக்குகள் பெற்றால் அடுத்த தேர்தலிலும் விசில் சின்னம் தவெக-வுக்கே ஒதுக்கப்படும்.ஒருவேளை 6 சதவிகித வாக்குகளை த.வெ.க பெறத் தவறினால் அடுத்தடுத்த தேர்தலில் விசில் சின்னம் ஒதுக்கப்படுமா என்பது தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். எனவே, குறைந்தபட்சம் விசில் சின்னத்தை தக்கவைக்கும் அளவுக்கு வெற்றிபெற தவெக விரும்பும்…

Related Articles

Back to top button
Close
Close