fbpx
Others

வால்பாறை படகு இல்லம்செயல்படாமல்ஐந்துஆண்டுகளாககிடப்பில்இருப்பது ஏன்….?

வால்பாறை படகு இல்லம் ஐந்து ஆண்டுகளாக செயல்படாமல் கிடப்பில் – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.….
வால்பாறை, கோவை மாவட்டம் :
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுற்றுலா பயணிகளின் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள படகு இல்லம் கடந்த ஐந்து ஆண்டுகளாக முறையாக செயல்படாமல் மூடப்பட்ட நிலையில் இருப்பதால், சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்து திரும்பிச்செல்லும்நிலைதொடர்கிறது.வால்பாறைக்குவரும்சுற்றுலாபயணிகள்,சாலையோரங்களில் வைக்கப்பட்டுள்ள படகு இல்லம் குறித்த வழிகாட்டி பதகைகளை பார்த்து அந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். ஆனால், அங்கு வந்தவுடன் படகு சேவை எதுவும் இல்லை என்பதையும், படகு இல்லம் மூடப்பட்ட நிலையில் இருப்பதையும் அறிந்து ஏமாற்றமடைந்து திரும்பிச் செல்கின்றனர்.மேலும், படகு இல்ல வளாகம் முழுவதும் குப்பை கழிவுகள் குவிந்து காணப்படுவதுடன், துர்நாற்றம் வீசும் சூழல் நிலவுகிறது. பராமரிப்பின்றி விடப்பட்டுள்ள இந்த படகு இல்லம், சுற்றுலா தலத்தின் அழகையும் புகழையும் பாதிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.இந்த படகு இல்லத்தை சீரமைத்து மீண்டும் செயல்படுத்த நகராட்சி நிர்வாகத்தால் பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், பணிகள் பெயரளவிலேயேதொடங்கப்பட்டு தொடர்ந்து எந்த முன்னேற்றமும் இன்றி தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.ஒரு காலத்தில் சுற்றுலா பயணிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்த இந்த படகு இல்லம், தற்போது சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் இடமாக மட்டுமே இருந்து வருகிறது. இதன் காரணமாக வால்பாறை பகுதியின் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.எனவே, வால்பாறை நகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து, படகு இல்லத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வால்பாறை வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்   கோவைமாவட்டம் புகைபட கலைஞர் ஜெயப்பிரகாஷ்.D

Related Articles

Back to top button
Close
Close