fbpx
Others

வால்பாறை சாலையில் தொடர் விபத்துகள்–சாலைவிரிவாக்கம் செய்யாதது ஏன்…?

pawan kumar appointed coimbatore collector : கோவை மாவட்ட ஆட்சியர்  மாற்றம்... புதிய ஆட்சியராக பவன்குமார் நியமனம்! கோவை மாவட்டம் வால்பாறை நகரை இணைக்கும் மலைச் சாலையில் 1/2/26 மாலை சுமார் 6 மணி அளவில் பயங்கர விபத்து ஒன்று நிகழ்ந்தது. வால்பாறை செல்லும் சாலையில் அமைந்துள்ள ‘இரண்டாவது கொண்டை ஊசி’ வளைவின் அடுத்த பகுதியில், பழனியிலிருந்து வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்று திரும்பி வந்த வேனும், அதே நேரத்தில் வந்த இருசக்கர வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்துக்கு காரணமாக சுற்றுலா வேனில் ஏற்பட்ட திடீர் பிரேக் பழுது என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வேன் கட்டுப்பாட்டை இழந்ததால் எதிரே வந்த அரசு பேருந்து மற்றும் இருசக்கர வாகனம் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஆறு பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.விபத்து நடைபெற்ற பகுதி மிகக் குறுகிய சாலையாக இருப்பதுடன், வாகனங்களை ஓரமாக நிறுத்துவதற்கும் போதிய இடமில்லாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக, இந்த இடத்தில் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெறுவது வழக்கமாகி விட்டதாக வால்பாறை வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக சுற்றுலா சீசன் மற்றும் வார விடுமுறை நாட்களில் அதிக அளவில் வாகனங்கள் வருகை தருவதால், விபத்து அபாயம் மேலும் அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, வால்பாறை பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு, இனி வரும் நாட்களில் இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க இந்த குறுகிய சாலைப்பகுதியை உடனடியாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக நெடுஞ்சாலைத் துறை இதற்கான ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலை விரிவாக்கம், பாதுகாப்பு தடுப்புகள் அமைத்தல் மற்றும் எச்சரிக்கை பலகைகள் நிறுவுதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.கோவை மாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்பிரகாஷ் தே

Related Articles

Back to top button
Close
Close