வால்பாறைவனத்துறை-சுற்றுலாபயணிகளுக்குமுக்கியஅறிவுறுத்தல்..
வால்பாறையில் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் யானைக் கூட்டங்கள் – இயற்கை அழகில் மெய்மறக்கும் பயணிகள்கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் மடியில் அமைந்துள்ள வால்பாறை, இயற்கை வளமும் பசுமையும் நிறைந்த ஒரு முக்கிய சுற்றுலா ஸ்தலமாக விளங்குகிறது. தேயிலை தோட்டங்கள், அடர்ந்த காடுகள், அருவிகள், அணைகள் என பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த மலைப்பகுதி, தற்போது யானைக் கூட்டங்களின் சஞ்சாரத்தால் சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது.வால்பாறை – பொள்ளாச்சி மலைச் சாலையிலும், சோலையார் அணை, அதிரப்பள்ளி சாலை, சேடல்டாம் குரங்குமுடி, கருமலை, ஆழியார் அணை உருளிக்கல் காமராஜ் நகர் சோலையார் உள்ளிட்ட வனப்பகுதிகளின் அருகிலும் யானைக் கூட்டங்கள் சாலை ஓரங்களில் சஞ்சரிப்பது அடிக்கடி காணப்படுகிறது. இயற்கையான சூழலில் யானைகள் கூட்டமாக நடந்து செல்லும் காட்சிகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.குறிப்பாக காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் யானைக் கூட்டங்கள் சாலையோரங்களில் தோன்றி, தேயிலை தோட்டங்கள் வழியாக நகரும் காட்சிகளை கண்ட சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்துக் கொண்டு ரசிப்பது அதிகரித்து வருகிறது. நகர்ப்புற வாழ்க்கையின் பரபரப்பில் இருந்து விலகி, காடுகளின் நடுவே வனவிலங்குகளை இயற்கை சூழலிலேயே காண முடிவது வால்பாறையின் தனிச்சிறப்பாக விளங்குகிறது.இதனால் சமீப காலமாக வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக உள்ளூர் மக்கள் மற்றும் வணிகர்கள் தெரிவிக்கின்றனர். விடுதிகள், ஹோம்ஸ்டே, உணவகங்கள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்கள் கூடுதல் வளர்ச்சி பெற்று வருகின்றன.அதே நேரத்தில், வனத்துறைசார்பில்சுற்றுலாபயணிகளுக்குமுக்கியஅறிவுறுத்தல்களும்வழங்கப்பட்டுள்ளன.யானைக் கூட்டங்களை அருகில் சென்று காட்சிப்படுத்தல், வாகனங்களில் இருந்துஇறங்குதல், சத்தம்எழுப்புதல்போன்றசெயல்களில்ஈடுபடக்கூடாதுஎன்றும்,பாதுகாப்பானதூரத்தில்இருந்துமட்டுமேயானைகளைரசிக்கவேண்டும்என்றும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.இயற்கை அழகும், வனவிலங்குகளின் சுதந்திரமான சஞ்சாரமும் இணைந்த வால்பாறை, குடும்ப சுற்றுலா பயணிகள், இயற்கை ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள் என அனைவரையும் ஈர்க்கும் முக்கிய சுற்றுலா தலமாக நாளுக்கு நாள் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜெயப்பிரகாஷ் தே கோவை மாவட்ட புகைபடகலைஞர்


