வாலாஜா நகராட்சி வளாகத்தில் உள்ள ஆதார் மையத்தில் மின்கசிவு அபாயம்…?
வாலாஜா, அக். 17: வாலாஜா நகராட்சி அலுவலகத்தின் ஒரு பகுதியில் ஆதார் மையம் செயல்பட்டு வருகிறது. இக்கட்டிடத்தின் ஃபால்ஸ் சீலிங் சிதிலமடைந்து, எந்த நேரத்திலும் கீழே விழும் அபாய நிலையில் உள்ளது.தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாகக் கட்டிடத்தின் சுவர்கள் ஊறி, ஈரப்பதத்தால் மின்
கசிவு (எர்த்) ஏற்படுகிறது. கட்டிடத்தின் எந்தப் பகுதியைத் தொட்டாலும் மின்சாரம் தாக்குவதால், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன்
வந்து செல்கின்றனர்.ஆதார் சேவைக்காக நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இம்மையத்திற்குவந்துசெல்கின்றனர்.மேலும்,ஆதார்மையஊழியர்களும்இக்கட்டிடத்தில்தான் பணியாற்றி வருகின்றனர். இவ்வளவு ஆபத்தான நிலையில் கட்டிடம் இருந்தும், நகராட்சி நிர்வாகம் அதனைக் கண்டுகொள்ளாமல் மெத்தனப் போக்கோடு செயல்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்“எந்த நேரத்தில் கட்டிடம் இடிந்து விழும் என்றோ அல்லது மின் கசிவால் பெரிய விபத்து ஏற்படுமோ என்றோ தெரியவில்லை. உயிருக்கு ஆபத்து நிறைந்த இந்தச் சூழலில் தினமும் இங்கு வந்து செல்ல வேண்டியுள்ளது” எனப் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு,வாலாஜாநகராட்சிநிர்வாகம்உடனடியாகஇந்தஆபத்தானகட்டிடத்தைப்பார்வையிட்டு,ஃபால்ஸ் சீலிங்கைச் சரி செய்தல், மின் கசிவைத் தடுத்தல் போன்ற சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் ஆதார் மையப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.