வாலாஜா-அல்லிகுளம் கிராமத்தில் மரணகுளமா..?
வாலாஜா அடுத்த அல்லிகுளம் கிராமத்தில் மரண குளம் போல் காட்சியளிக்கும் சாலை கண்டுகொள்ளுமா பேரூராட்சி நிர்வாகம்?
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த
அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 14-வது வார்டில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அள்ளிகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகில் உள்ள பள்ளிக்கூடம் சாலையில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் பெய்த தொடர் கனமழையால் சாலை முழுவதும் சரிவு ஏற்பட்டு சேரும் சகதியுமாக மரண குட்டை போல் காட்சி அளிக்கின்றது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் அந்த வழி முக்கிய சாலை என்பதால் அவ்வழியாகத்தான் அனைத்து பணிகளுக்கும் செல்ல வேண்டும். பொதுமக்கள் மாற்றுப்பாதையில் செல்லலாம் என நினைத்தால் அந்த சாலையிலும் ஜல்லிக்கட்கள் சாலை முழுவதும் கொட்டி வைத்து கடந்த இரண்டு மாதங்களாக அப்புறப்படுத்தாமல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகின்றனர்.இதனால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்கள்,முதியவர்கள் அனைவரும் தினசரி பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்கள் இருசக்கர வாகனத்தில் அவ்வழியே செல்லும்போது பள்ளத்தில் சிக்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் 14-வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் மற்றும் அம்மூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தகவல் தெரிவித்தும் அலட்சியம் காட்டும் விதமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஆகவே பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அந்த சாலையை சீர் செய்து புதிய சாலை அமைத்து தரும்படி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களி ன் பெரும் கோரிக்கையாக உள்ளது.