fbpx
Others

வானவில் மன்ற கருத்தாளருக்கான வகுப்பு….

வானவில் மன்ற அறிவியல் போற்றுதும் சிறப்பு பயிற்சி வகுப்பானது திருநெல்வேலி,தென்காசி,தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட வானவில் மன்ற கருத்தாளர்களுக்கான வகுப்பானது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய இஞ்ஞாசியார்மேல்நிலைப்பள்ளியில்23.09.25அன்றுசிறப்பாகநடைபெற்றது.இவ்வகுப்பில் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர் திருமதி. ஞான அருணா தமிழ் மலர் அவர்கள் தலைமை தாங்கி வானவில் மன்றகுறிக்கோள் பற்றி அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார்கள். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி .ஜெயமேரி அற்புதம் அவர்கள் கலந்து கொண்டு வானவில் மன்ற போட்டிக்கான செயல்பாடுகளின் சிறப்பு வகுப்பினை அழகுற நடத்தினார்கள். சிறப்பு பயிற்சி வகுப்பின் சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமிகு.மு. சிவக்குமார் அவர்கள் கலந்து கொண்டு வானவில் மன்ற செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என எடுத்துரைத்தார்கள்.இந்த ஆண்டில் வானவில் மன்ற வகுப்பில் நீங்கள் என்ன செய்ய இருக்கிறீர்கள் என்பதை விவாதித்து பட்டியலிட வேண்டும் .பட்டியலிட்ட பின்பு எந்த குழு சிறப்பாக எழுதி உள்ளதோ அந்த குழுவிற்கு புத்தக சிறப்பு வழங்குவேன் என்று முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்தார்கள். அதன் அடிப்படையில் பயிற்சி நிறைவுற்ற பின்பு சிறப்பாக விவாதித்த குழுவிற்கு முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் முதன்மை கல்வி அலுவலகத்தில் வைத்து பரிசினை 8 வானவில் மன்ற கருத்தாளர்களுக்கு வழங்கினார்கள். பயிற்சி வகுப்பினை தென்மண்டல வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் திருமிகு. ரமேஷ் அவர்கள் தொடக்க முதல் இறுதி வரை அழகாக கருத்துக்களை சிறிய விளையாட்டுகளுடன் நடத்தினார்கள்.தமிழ்நாடு அறிவியல் இயக்க செயலாளர் திருமிகு பரமசிவம் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.திருநெல்வேலி மாவட்ட இணைச்செயலாளர் உமேஷ் அவர்கள் கலந்து கொண்டு பாடல் பாடியும் மந்திரமா தந்திரமா நிகழ்வையும் அறிவியல் மனப்பான்மை பற்றியும் எடுத்துரைத்தார்கள். இந்நிகழ்வை திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மற்றும் அமைப்பு சார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமிகு.ஐயப்பன் அவர்கள் சிறப்பு வகுப்பினை ஒருங்கிணைத்தார்கள்.

Related Articles

Back to top button
Close
Close