fbpx
Others

வானதி சீனிவாசனுக்கு மொழி பெயர்க்கும் வாய்ப்பு..

உற்று பார்த்த எச்.ராஜா.. வானதி கை மாறிய "மைக்" -பாஜக தலைவர் ஜேபி நட்டா பேச்சை மொழி பெயர்க்காதது ஏன்?

 

 

  •  மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பேச்சை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் மொழிபெயர்த்தார். வழக்கமாக தமிழ்நாட்டுக்கு வரும் தேசிய தலைவர்களின் பேச்சை எச்.ராஜா மொழி பெயர்க்கும் நிலையில் இன்று அவர் மேடையில் இருந்தபோதே வானதி சீனிவாசனுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது.  கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று தமிழ்நாடு வருகை தந்தார்.அவருக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்ட நிகழ்வுக்கு அவர் சென்றார்

 கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை அறிவித்தார். அன்றிலிருந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கட்சியை வளர்க்கும் பணிகளில் தலைவர்கள் முழு வீச்சில் இறங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து பாஜக தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் தென்னிந்தியாவுக்கு அடிக்கடி வருகை தருகின்றனர். 2024 லோக் சபா தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணிகளையும் இப்போதே தொடங்கி இருக்கிறது பாஜக. குறுகிய கால இடைவெளியில் பிரதமர் நரேந்திர மோடி 3 முறை தமிழ்நாடுக்கு வந்து சென்று இருக்கிறார்.அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் பாஜக தேசிய தலைவரான ஜே.பி.நட்டா பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு வந்தார். சிவகங்கை மாவட்டத்தில் கட்சி மற்றும் பொது நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள இருக்கிறார். முன்னதாக மதுரை விமான நிலையத்திற்கு வந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசிய அவர், மாலை காரைக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.இந்த நிலையில் 2024 தேர்தலை முன்னிட்டு ஜே.பி.நட்டா அகில இந்திய சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். இதனை தமிழ்நாட்டில் இன்று அவர் தொடங்கி உள்ளார். கோவை மற்றும் நீலகிரி மாவட்டம் பாஜக வாக்குச்சாவடி முகவர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஜேபி நட்டா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

இந்த கூட்டத்தில் துடிப்பான மாநிலத் தலைவர் அண்ணாமலை என்று ஆங்கிலத்தில் பேச்சை தொடங்கிய ஜே.பி.நட்டா, “தமிழ்நாடு ஆன்மீக பூமி. பழமையான, பழமையான மொழியை கொண்ட இங்கு வர மகிழ்ச்சியடைகிறேன். நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலிலும் மாற்றம் உண்டாடும். நாம் நம்பிக்கையான முன்னேற்றத்தை பார்த்துக்கொண்டே உள்ளோம்.” என்றார்.வழக்கமாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் தமிழ்நாடு வரும் நேரத்தில் அவர்கள் ஆற்றும் உரைகளை பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா மொழி பெயர்ப்பது வழக்கம். காரைக்குடி பொதுக்கூட்டத்திலும் எச்.ராஜாவே மொழிபெயர்த்தார். ஆனால், இம்முறை பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஜே.பி.நட்டா பேச்சை மொழிபெயர்த்து உள்ளார். கோவை மாவட்டத்தில் இந்த கூட்டம் நடைபெறுவதால் அந்த மாவட்டத்தின் எம்.எல்.ஏவான வானதியை மொழிபெயர்க்க வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது

Related Articles

Back to top button
Close
Close