fbpx
Others

வாகன வரி உயர்வு—அரசிதழ் வெளியீடு…….?

சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய மற்றும் பழைய 2 சக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பஸ்கள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்திற்கு பயன்படும் வாகனங்கள், கார்கள்,டாக்சிகள்,‘கேப்’கள்எனஅனைத்துவகைமோட்டார்வாகனங்களுக்குபுதியவரிநிர்ணயிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, தமிழ்நாடு மோட்டார் வாகன வரி திருத்தம் செய்யும் மசோதா (Tamil Nadu Motor Vehicles Taxation Act Amendment Bill) கடந்த சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.அப்போது, பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ” போக்குவரத்து துறையில் 2012-ம் ஆண்டுக்கு பிறகு வரிகள்உயர்த்தப்படவில்லை.எனவே,வரிவிதிப்புமுறைகளில்திருத்தம்செய்ய அரசுமுடிவுஎடுத்துள்ளது.இதன் படி, அனைத்து வகை வாகனங்களுக்கும் புதிய வரிநிர்ணயிக்கப்படுவதாகதெரிவித்தார்.குரல்வாக்கெடுப்புமூலம்இந்தமசோதாநிறைவேறியது.இந்நிலையில், அதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி , வாடகை பயணிகள் போக்குவரத்து வாகனங்களில், சுற்றுலா மற்றும் ஒப்பந்த வாகனங்களுக்கு காலாண்டு வரி ரூ.4,900-ஆகவும், 35 பேருக்கு மேல் பயணித்தால் இருக்கைக்கு ரூ.3 ஆயிரமும், படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும் வரிஉயர்கிறது. சென்னை, மதுரை, கோவை நகர சுற்றுப்பகுதிகளில் இயக்க அனுமதிக்கப்பட்ட பிரத்யேக பேருந்துகளுக்கு மேல்வரிவிதிக்கப்பட்டுள்ளது .பயணிகள் போக்குவரத்து, வாடகை வாகனங்களுக்கு 5 ஆண்டு வரியாக ரூ.1,400 முதல்ரூ.6,000வரைபயணிகளின்எண்ணிக்கைஅடிப்படையில்வரிஉயா்த்தப்படுகிறது புதிய பைக்குகளுக்கான வாழ்நாள் வரி (Life Tax), ரூ.1 லட்சம் வரை 10 சதவீதம், ரூ.1 லட்சத்துக்கு மேல் இருந்தால் 12 சதவீதமும், பழைய பைக்குகளுக்கு, ஒருவருட பழையதெனில் ரூ.1 லட்சம் வரை விலைக்கு 8.25 சதவீதமும், அதற்கு மேல் 10.25 சதவீதமும், 2 ஆண்டு வரை பழைமையானதாக இருந்தால் ரூ.1 லட்சத்துக்கு 8 சதவீதம், அதற்கு மேல் 10 சதவீதம் என வரி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.இதுதவிர, 15 ஆண்டுகள் நிறைவடையாத இருசக்கர வாகனங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கான பசுமைவரிரூ.750,மற்றமோட்டாா்வாகனங்களுக்குரூ.1,500எனநிா்ணயிக்கப்பட்டுள்ளது.புதிய வாகனங்களுக்கான சாலை பாதுகாப்பு வரி இருசக்கரவாகனங்களுக்கு ரூ.375, இலகுரக வாகனங்களுக்கு ரூ.2,250, மற்ற வாகனங்களுக்கு ரூ.3 ஆயிரம் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close