“வந்தே மாதரம்”—இன்று இரு அவைகளிலும் காரசாரவிவாதம்….
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த வாரம் ஆரம்பித்தது. கடந்த வாரம் பெரும்பாலான நாட்கள் அவை முடக்கப்பட்டது. சார், டெல்லி காற்று மாசு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் எனச் சொல்லி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டனர். அவையையும் முடக்கினர்.இந்தச் சூழலில் தான் சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு நாடாளுமன்றம் மீண்டும் கூடுகிறது. இன்றைய தினம் “வந்தே மாதரம்” கீதத்தின் 150வது ஆண்டையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி லோக்சபாவில் ஒரு விவாதத்தைத் தொடங்கி வைக்கிறார். சுதந்திரப் போராட்டத்தின் போது காங்கிரஸின் ஒரு முக்கிய கோஷமாக இருந்த இப்பாடலை, இப்போது ஆளும் பாஜக கையில் எடுத்துள்ளது. இந்தச் சூழலில் தான் வந்தே மாதரம் குறித்த விவாதம் இன்று நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரியங்கா காந்தி வதேரா மற்றும் கௌரவ் கோகோய் ஆகியோர் இந்தவிவாதத்தில்உரையாற்றுவார்கள்.சமீபத்தில் தான்’வந்தே மாதரம்’ பாடலை
‘ஒற்றுமைக்கும் தைரியத்திற்கும் ஒரு மந்திரம்’ என்று பிரதமர் மோடி அண்மையில் குறிப்பிட்டிருந்தார். 150 ஆண்டுகளை நிறைவு செய்யும் வந்தே மாதரம் குறித்த விவாதிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தலா பத்து மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் பிரதமர் மோடி பேசும் நிலையில், ராஜ்யசபாவில் நடைபெறவுள்ள விவாதத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகிறார். இந்த விவாதம் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.